பக்கம் எண் :

134பாயிர விருத்தி

1“ஏதுவி னாங்கவை துடைத்த னுட்பம்.’’

என்பதனான் அறிக. இனி எச்சம் என்பது என்னை எனின்?

2“துடைத்துக்கொள் பொருளை யெச்சமென்ப.’’

என்பதனான் அறிக.

இனி இந்நால்வகையினையும் இவ்வாசிரியன் காண்டிகை வகை இரண்டு, உரை வகை இரண்டு என இருவகையுள் அடக்கிக் கூறும்.

அவற்றுள் மலை, பன்னெறியால் பெற்ற நீரைப் பாடம் கண்ணழிவு உதாரணம் என்று இவை நாடில் திரிபு இலவாய பொழிப்புரை என மழைநீர் ஊற்றுநீர் சுனைநீர் என்று இவை நாடில் திரிபு இலவாய அருவிநீர் எனக் காட்டலும். அவற்றை ஆற்றது ஒழுக்கில் செல்லவிடாது ஆங்கு ஆங்கு இடையிடை அணை கொண்டு தடைசெய்து அகலம் செய்யாமையும் உடைத்து.

நிலன், தன்னிடத்து இட்ட நெல் முதலாய வித்தினை ஒன்று பல ஆமாறு விரித்து ஒவ்வொன்றினும் உமி தவிடு முதலாய தடைபெய்து அகலம் செய்து அரிசி முதலாய பொருளை வெளிப்படுத்தாது மறைத்தலும் அத்தடை துடைத்தற்குத் தன்னிடத்து ஏது இன்மையும் உடைத்து.

பூ, தேனைக் காம்பாகிய தடையுட் படுத்து அத்தடை துடைத்து அத்தேனைக் கோடற்கு இதழ் விரிதலாகிய ஏது உடைமையும், அவ் ஏதுவால் தானே அத்தடை துடைத்துக் கொடாமையும் உடைத்து.

துலாக்கோல், கொள்வோர்க்கு அளவு தெரியாமையாகிய தடையை நிறைதெரிக்கும் தன் வரையாகிய ஏதுவால் தானே துடைத்து எச்சமாகிய பொருள் அளித்தல் உடைத்து.

இவ்வாற்றான் அந்நான்கு இயல்பும் ஒருங்கு உடைய சூத்திரப் பயன் உரைத்தல் அவன் தொழில் என்பது பெறப்பட்டது.

அக்குடம், கழற்காயைத் திரிபின்றித் திரட்டிக் காட்டாமல் வேறுவேறு காட்டலும், அதன் பருப்பைத் தோலான் மூடித் தடை செயலும் உடைத்து.


1,2தொல், பாயிரம் இளம்பூரணருரை மேற்கோள்.