பக்கம் எண் :

அரசஞ் சண்முகனார்135

அப்பனை, மூடிய பாளையைத் தானே விரித்தலில் தடை செய்யாமையும், பாளை விரிதற்கு வெடித்தலாகிய ஏதுவையும் உடைத்து.

அத்தெங்கு, பாளை இன்மையின் விரிதற்கு ஏதுவும் இன்மையும், பழுத்தலாகிய ஏதுவின் பற்றுவிடாமையாகிய தடையினைத் தானே துடைத்து மட்டை முதலாய எச்சப் பொருளைக் கொடுத்தலும் உடைத்து.

அப்பருத்தி, வெடித்தல் இன்மையாகிய தடையினைத் தானே துடைத்து எச்சமாகிய உட்பொருளைக் கொடாமை உடைத்து.

இவ்வாற்றான் அல்லாதான் அந்நான்கு வகை உரையுள் ஒன்றும் அறியான் என்பது பெறப்பட்டது.

இனி மூன்றாவதாகிய செயப்படுபொருள் எனும் கல்வியின் இயல்பு உரைக்கற்பாற்று.

அக்கல்வி, களவு நூல் முதலாயவாயின் இம்மை மறுமை இரண்டினும் தீய பயத்தலானும், சொல் நயம் பொருள் நயம் இன்றிக் காலம் கழிப்பி, ஆரவாரம் பயக்கும் கதை முதலாயினவாயின் இம்மை மறுமை இரண்டினும் பயனிலவாக முடிதலானும், அறத்தொடு படாப் பொருள் நூலும் அறத்தொடும் பொருளொடும் படா இன்ப நூலுமாயின் அறத்தாற்றின் அன்றிப் புறத்தாற்றில் செலுத்தலில் தீயவற்றொடுகூடி அவற்றியல்பாகித் தீய பயத்தலானும், நன்னூல் முதலாயின பயன்படும் இலக்கணம் கூறப்புகினும் பயனிலவாய போக்கு உடைமையின், அப்போக்கினைக் களைந்து தன் இயல்பு ஆக்காமையானும், தொல்காப்பியம் முதலாயின போக்கறு நூலாயினும்,

1“கற்றதூஉ மின்றிக் கணக்காயர் பாடத்தாற்
 பெற்றதாம் பேதையோர் சூத்திர- மற்றதனை
 நல்லா ரிடைப்புக்கு நாணாது சொல்லித்தன்
 புல்லறிவு காட்டி விடும்’’

என்றார் ஆகலின், அவ்வாறு பெற்றவாயின் அவனது புல்லறிவு காட்டிப் பின்னும் அவனை ஈவோனாகச் செய்யாது வறியனாக்குத


1நாலடியார்-314