லானும், அவை எல்லாம் அறம் பயவாமையின் ஈகைக்கு உரிய பொருளாகாமையான், ஏனைய அறநூலும் அறத்தொடுபட்ட பொருள் நூலும் அறத்தொடும் பொருளொடும்பட்ட இன்ப நூலும் தீயவும் பயனிலவுமாகாமல் அறம் பொருள் இன்பம் பயக்கும் கருவி நூலும் என அவை கணக்காயர் பாடத்தால் பெறாது தான் கற்றறிந்த நூலாயின் ஈதற்கு உரிய பொருள் எனப்படும். இவ்வாற்றான் அப்பொருட்குக் குற்றமின்மை நான்கு வகைப்படும்; தீயவும் பயனிலவும் ஆகாமல் நன்மை பயத்தலும், இனத்தியல்பால் தன் இயல்பு கெடாமையும், இனத்தியல்பைத் தன் இயல்பாக்கலும், ஈவோனைப் பின்னும் ஈவோன் ஆக்கலும் என. அவற்றுள் மலையான் அளிக்கப்படும் அருவிநீர், தீயவும் பயனிலவும் ஆகாமல் நன்மை பயத்தல்குணமும் நச்சுப் பொய்கையின் விழின் நஞ்சாகித் தீங்கு பயத்தலானும், கடலின் விழின் உவர்நீராகிப் பயன்படாமையானும், இனத்தியல்பால் தன் இயல்பு கெடல் குற்றமும் உடைத்து. நிலத்தான் அளிக்கப்படும் நெல், தீங்கு பயக்கும் களை முதலாயவற்றொடு கூடியவழியும் தீங்கு செய்யாமையானும், பயனிலவாய பதடி முதலாயவற்றொடு கூடியவழியும் பானில ஆகாமையானும் அக்குற்றம் இன்மையும், அக்களை முதலாயவற்றைத் தன் இயல்பாக்காக் குற்றமும் உடைத்து. பூவான் அளிக்கப்படும் தேன், மகரந்தம் முதலாயவற்றொடு கூடியவழி, அவற்றையும் இனிமை உடையவாகச் செய்தலின் அக்குற்றம் இன்மையும், தன்னை அளித்த பூவைப் பின்னும் தேன் ஈயாவண்ணம் வறிதாகச் செய்தலும் உடைத்து. துலாக்கோலான் அளிக்கப்படும் பொருள், தன்னை அளித்த பின்னரும் அத்துலாக்கோலை ஈதல் உடைத்தாகச் செய்தலின் அக்குற்றம் இன்று. இனி ஐய விபரீதம் அறக் கற்ற தொல்காப்பியம் முதலாயின தீங்கு பயத்தலும் பயனிலவாதலும் இன்றி, அறம் பொருள் இன்பம் வீடு என்னும் நன்மை பயத்தலும், இவை தீயவை, இவை பயனில என இடை இடை வேறுசில கூறினும் அவற்றால் தம் இயல்பு கெடாமையும், அவற்றை அறிந்து ஒழித்தற்குத் தாம் கருவியாக முடிதலின் அவற்றையும் தம் இயல்பாக்கலும், தம்மை அளித்த பின்னும் |