ஆசிரியன் அல்லாதான், சிறிது பொருள் கொடுப்பினும் நியமம் இன்றி, மாணாக்கர் விரும்பும் இடன் யாதாயினும் ஆங்குச் செல்லும் இயல்பினன். அப்பனை, கள் ஈயுமிடத்துத் தன் முகம் மறையாதாயினும் மட்டையான் அவர் முகம் மறைதல் உடைத்து. அத்தெங்கு, மட்டை ஊழ்க்கும் இடத்துக் கொள்வோர் முகத்தை மறையாவிடினும் அவர் மேனோக்கிப் பாராமையின் தன் முகம் அவர்க்கு மறைதல் உடைத்து. அப்பருத்தி, அளிக்குமிடத்துச் சிறார் விரலால் பற்றிச் சிதைத்தலின், அவர் முகம் தனக்கு மறைதல் உடைத்து. இவ்வாற்றான் அல்லாதானது இடத்தின் தன்மை அறியப்படும் என்பது. இனிக் கொள்வோனைப் பற்றிக் கொள்ளு நிலன் உரைக்கற்பாற்று. அது கொள்வோரை வரையாமையும், அல்லாதாரை வரைவும், கொள்வோர் உடன்பாடு பெறினும் அல்லாதாரை வரைவும், கொள்வோர் உடன்பாடு பெறா இடத்தும் அவருள் யாவரையும் வரையாமையும் என நான்கு இயல்பு உடைத்து. அவற்றுள் மலை, கொள்வோரை வரையாமையுடன் அல்லாதாரையும் வரையாமை உடைத்து. நிலன், அல்லாதாரை வரைவும் கொள்வோர் உடன்படின், அல்லாதாரை வரையாமையும் உடைத்து. பூ, தேன் அளிக்குமிடத்துத் தும்பி விலக்காது உடன்பட்ட இடத்தும் ஈ முதலாய பிறவற்றை விலக்கலின் அக்குற்றம் இன்மையும், அஃது உள்ளிருக்குமிடத்து ஏனைத் தும்பியை விலக்கலின், அதன் உடன்பாடு பெறா இடத்து ஏனை தும்பியை வரையும் குற்றமும் உடைத்து. துலாக்கோல், கொள்வோர் உடன்பாடு பெறா இடத்தும் வணிகன் உடன்படின், யாவர்க்கும் உரிமை உடைமையின் அக்குற்றம் இன்று. இவ்வாற்றான் அம்முக்குற்றமும் இன்மையின் நந்நான்கு இயல்பும் ஒருங்கு உடைய நிலத்திருந்து அளித்தல் அவன் இயல்பு என்பது பெறப்பட்டது. இனி உரைப்பாட்டு, |