பக்கம் எண் :

142பாயிர விருத்தி

அவ்வரைவு 1வேண்டிய கல்வி யாண்டு மூன்றிறவா தென்பதூஉம் பிறவும் குறித்துக் கொள்வோனும், வேள்வியும் பிறவும் குறித்து ஈவோனும் நோய் முதலாயின குறித்து இருவரும் பிரிதலின் ஈகை ஒழிதற்பாலதாய பிரிவு வரைவும், வேனிலும் நண்பகலும் முதலாய காலத்துக் கூரியர் சிந்தையும் கூம்பும் ஆற்றானும் வைகறை எற்பாடு இடையாமம் என்னும் சிறுபொழுது, நித்த கருமத்துக்கும் உலகியற்கும் உறக்கத்துக்கும் இன்றியமையாது வேண்டப்படலானும் ஈகை ஒழிதற்பாலவாய பெரும்பொழுதுவரைவும், சிறுபொழுதுவரைவும், அளித்தற்கு உரிய ஏனைப் பெரும்பொழுது சிறு பொழுதினும் உவா முதலிய காலத்தை நூல் விலக்கலின் ஈகை ஒழிதற்பாலதாய விலக்குவரைவும் என நான்கு.

அவற்றுள் மலை, அருவியை என்றும் அளிக்கும் இயல்பிறற்றாயினும் உடற்குப் பொருந்தாமையால் கொள்வோர் பிரிதலும் உண்மையின் அஃது அன்ன பல காரணத்தால் பிரியும் பிரிவு வரைவும், இது வெம்மைக்காலம் ஆகலின் அளித்தலாகாது என்று நீக்காமையின் பெரும்பொழுது வரையாமையும் உடைத்து.

நிலன், வேனில் பெரும்பொழுது வளன் ஈயாது காய்தலின் அக்குற்றம் இன்மையும், அளிக்கும் காலத்து நண்பகல் முதலாய சிறுபொழுதும் அளித்தலின், சிறுபொழுது வரையாமையும் உடைத்து.

பூ, நண்பகல் முதலாயபொழுதின் அளியாது காலையினும் மாலையினும் அளித்தலின் அக்குற்றம் இன்மையும், அஃது அளிக்கும் காலத்தைப் பிறர் விலக்கின் கேளாமையும் உடைத்து.

துலாக்கோல், கோடற்கும் கொடுத்தற்கும் உரிய காலத்தும் விழா முதலாய குறித்து அரசன் விலக்கின் அளியாமையின் அக்குற்றம் இன்று.

இவ்வாற்றான் அம்முக்குற்றமும் இன்மையான் அந்நான்கு வரைவும் ஒருங்கு உடைய காலத்தால் அவை நான்கும் அவனுக்குப் பிண்ட உவமம் ஆயின என்பது.

இனி உரைப்பாட்டு,

“பிரிவின் வரைவும் பெரும்பொழுது வரைவுஞ்
 சிறுபொழுது வரைவுந் தெள்ளியோர் விலக்கலின்

1தொல், பொருளதிகாரம், 188