பக்கம் எண் :

அரசஞ் சண்முகனா்143

வரைவு மென்ன வுரைபெறு நான்குங்
கால முடைத்தெனன் மேலையோர் துணிவே.’’

என்பது.

அக்குடம், நோயுறினும் சிறார் விளையாட்டை மறவாமையின் பிரிவு வரைவை இன்று. அப்பனை, வேனில் பெரும்பொழுதின் மிக அளித்தலின் அவ்வரைவை இன்று. அத்தெங்கு, நண்பகலினும் ஊழ்த்தலின் அவ்வரைவை இன்று. அப்பருத்தி, உவா முதலாய காலத்தையும் விலக்காமையின் அவ்வரைவு இன்று.

இவ்வாற்றான் அல்லாதான் இக்காலத்து ஈகை தக்கது, இக்காலத்துத் தக்கின்று என அறியாமல் ஈவான் என்பது பெறப்பட்டது.

இனி ஆறாவதாகிய கருவி உரைக்கப்பாற்று.

ஈண்டுக் கருவி எனப்படுவது ஏதுப் பொருண்மை ஆகலின், பிற காரணம் எல்லாம் இருப்பினும் ஈவோனது அருளின்றேல் ஈகை நிகழாமையின் அவ்வருள் அவ்ஈகைக்குக் கருவியாம் என்பது.

அக்கருவி காரணம் இன்மையானாய இயற்கை அருளும், குறிப்பறிந்து ஒழுகல் முதலாய பணி செயலானும், பொருள் முதலாய கொடுத்தலானும், இன்சொற் கூறலானும் ஒன்றற்கு ஒன்று மிகுதற் பாலவாய மூவகைச் செயற்கை அருளும் என நான்கு.

அவற்றுள் இயற்கை அருளின்மேல் பணிசெயல் முதலாய காரணம் இல்வழிக் காரியமாய செயற்கை அருளும் இன்மையான் ஈதல் நிகழாமையானும், செயற்கை அருளின்றேல் மாணாக்கர் செய்யும்பணி முதலாயின பயன்படாமல் அவர்க்கு அறம் அளியாமையானும் ஆசிரியன் இயற்கை அருளொடு மூவகைச் செயற்கை அருளும் உடையனாதல் உணரப்படும்.

அவற்றுள் மலை, இயற்கை அருளான் அருவிநீர் ஈதல் உடைத்து. பணி முதலாயின செய்யின் அதுபற்றி முன்னினும் மிகக்கொடுத்தல் இல்லாக் குற்றமும் உடைத்து.

நிலன், உழவு முதலாய பணி நன்கு செய்யின் அதற்குத்தக இயற்கை அருளால் கொடுத்தலினும் மிகக் கொடுத்தலின் அக்குற்றம் இன்மையும் இன்சொல் கூறின் அதற்குத்தகக் கொடுத்தலின்மையும் உடைத்து.