பக்கம் எண் :

146பாயிர விருத்தி

அக்குடம், கல்வி செல்வம் என்னும் இருவகைப் பொருளுள் யாதானும் ஒன்று பெற முயலாச் சிறுவர்க்கு அளித்தல் உடைத்து.

அப்பனை, கற்றற்கு உரிய காலமாகாத வேனிலின் மிகக் கொடுத்தல் உடைத்து.

அத்தெங், தீவினை ஓம்புமாறு அடுதொழில் உடையார்க்கு அளித்தல் உடைத்து, தீவினை ஓம்பல், தீயால் ஊண் அடுதொழில் ஓம்பலும், தீவினையாகிய கொலைத்தொழில் ஓம்பலுமாம்.

அப்பருத்தி, பஞ்சினை ஆடைக்கு ஆம் என்று உணராது கோது என்று எறிந்துவிடும் சிறார்க்கு அளித்தல் உடைத்து.

இவ்வாற்றான் அல்லாதான் முயற்சி இன்மை முதலாயின கருதிக் கொள்வோரை வரையாமை பெறப்பட்டது.

இனி ஈற்றில் நின்ற பயன் உரைக்கற் பாற்று.

அப்பயன், அளித்தபின் அவ் ஈகை எல்லாரானும் நன்கு மதிக்கப் படுதலும், கொள்வோனான் நன்கு மதிக்கப்படுதலும், அதனை அவன் பெற்று அடைந்த பயன் காரணமாக ஈவோனுக்கு இம்மையின் உளதாய பயனும், ஈதல் காரணமாக இம்மை மறுமை இரண்டினும் உளதாய பயனும் என நான்கு வகைப்படும்.

அவற்றுள் மலை, நிலையில் திரியாது அளிக்கும் தோற்றத்தான் எல்லாரானும் காணப்படும் காட்சி உடைத்தாயினும் அடங்காது உயர்ந்து நிற்றலும் கண்செல்லும் அளவின் அன்றிக் கண் செல்லா இடத்துக் காணப்படாமையும் உடைத்து. அஃது அல்லாமல் அருவிநீர் அளித்துக் கொள்வோரைத் தாகம் தீர்த்துக் காப்பினும், தன்முன் அன்றித் தன்னின் பிரிந்துபோயபின் அவரைக் காவாமையும் உடைத்து.

ஆசிரியன் நிலையில் திரியாமையோடு அடங்கி அளித்தலானும் கண் செல்லும் அளவு கடந்து அறிவுசெல்லும் துணை உலகமெல்லாம் நன்கு மதிக்கும் புகழுடையன் ஆகலானும், தான் இருக்குமிடத்து அன்றித் தன்னின் பிரிந்து போயபின்னும்