மாணாக்கனைத் தான் கற்பித்தவண்ணம் நிற்கவைத்துக் காத்தலானும் 1மலையினு மாணப் பெரியனாவன். நிலன், உழவர்க்குக் காலத்தினால் செய்த வளன் சிறிதே எனினும் அவ்வளன் மலைவளன்போலன்றி அடங்கிச் சேமித்து வைக்கப்படுதலின் அது கண் செல்லா இடமாயினும் காணப்படுதலும், தான் இருக்கும் இடத்தில் காத்தலே அன்றி அவர் செல்லும் இடத்தும் சென்று காத்தலும் உடைத்து. அத்தன்மையோடு ஒரு பிறப்பாயினும் முற்றக் காவாமல் சில ஆண்டே காத்தலும், தன்னைத் தாங்கி அளிக்கும் வானத்துக்குக் கைம்மாறு செய்யாமையும் உடைத்து. ஆசிரியன் மாணாக்கர்க்குக் 2காலத்தினாற் செய்த நன்றி சிறிதே எனினும் அந்நன்றி, ஒருமைக்கண் சில ஆண்டே அன்றி முற்றக் காத்தலும், அப்பிறப்பே அன்றி அவர்க்கு 3எழுமையு மேமாப்புடைத்தாகலும் உடைமையானும், கல்வி அளித்த தன்னைப் பணிமுதல் செய்து தாங்கி ஆதரித்த மாணாக்கர்க்கு அறமும் புகழுமாகிய கைம்மாறு அளித்தலானும் 4ஞாலத்தினு மாணப்பெரியன் ஆவன். பூ, நிலன் போலன்றித் தாங்கிய கூந்தற்கு அறம் எனத் தாதினையும் புகழென நறுமணனையும் அளித்தலும், தான் அழிந்த பின்னர் அவை சில்பகலே நிலையலின் அக்கூந்தல் இருக்கும் துணை அளியாமையும், தும்பிக்குத் தேனை அளிப்பினும் அவ் ஈகையால் தான் பயன் பெறாமையும் உடைத்து. ஆசிரியன், பூதவுடல் பொன்றினும் தாங்கிய வையம் இருக்கும் துணைப் புகழ் உடலை நிறுத்தலும், கல்வியை அளித்தலின் பயனாக அறம் பொருள் இன்பமும் வீடும் பெறுதலும் உடையன் ஆகலின் அப்பூவினும் மாணப்பெரியன் ஆவன். துலாக்கோல், பூப்போலன்றித் தன்னைத் தூக்கி நிறுத்த வணிகனுக்குத் தான் அழிந்தபின்னும் ஊதியப் பொருளையும் வணிகன் என்னும் பெயரையும் நிலைபெறச் செயலும், அளிக்கும் இடத்து விலைப்பொருளைப் பயனாகப் பெறுதலும் உடைத்து. அப்பெற்றித் தாய அக்கோலால் கிடைத்த ஊதியமும் விலையுமாகிய பொருள் அழிதன்மாலை அவாய்க் குறைதலும் அக்கோலான் எய்திய
1. திருக்குறள் 124 2. திருக்குறள் 102 3. திருக்குறள் 398 4. திருக்குறள் 102. |