மடல்; தென்னம் பழுத்தலையும் பனங்கருக்கினையும் பிறவற்றையும் உணர்த்தும் பல பொருள் ஒரு சொல்லாகலான் எனின்; அது பொருந்தாது. என்னை? உலர்ந்த தென்னம் பாளையையும் ஈத்தினையும் ஆக்கைக்குக் கருவி ஆமாறு வார்போலக் கிழித்தும் கிழித்துத் திரித்துப் பனை ஓலை தெங்கின் ஓலை ஈத்திலை முதலாயவற்றைப் பிணித்துக் குடில் முதலாயின வேய்தலும், படுபுள் ஓப்பும் சிறாரும் சிறுமியரும் கழனிக்கண் பனைமேல் ஏறி அக்கருக்கினைக் கொள்ளாமல் தானே கழிதற்பாலதாகிய பனம்பூ என்னும் மடலில் கனல் கொளுத்தி அக்கனலில் மீன் சுடலும் வழக்காகலின், வாடுமடல் என்றமையான் உலர்ந்த பாளை அம்பூவானும் தெங்கின் வண் தோட்டானும் வேய்ந்த முன்றில் எனவும், ஒழி மடல் என்றமையால் தானே கழிவதாகிய பனம்பூ எனவும் பொருள் கோடலே சிறக்கும் ஆகலானும் முன்னரும் அவ்வாறே கொழுமடலானும் ஈத்திலையானும் வேய்ந்த குரம்பை எனப் பொருள்படுமாறு கொழுமடல் ஈத்திலை வேய்ந்த குரம்பை எனப் பொருள்படுமாறு கொழுமடல் ஈத்திலை வேய்ந்த வெய்ப்புறக் குரம்பை என்றமையானும், ஒழிமடல் எனில் பனங்கருக்குத் தானே கழிதலின்மையின் தானே கழியும் பனம்பூவாகிய மடலையே உணர்த்தும் ஆகலானும் மீன்சுடற்குப் பனங்கருக்கினைக் கொள்ளின் அது மிக்கு எரியும் ஆகலின், மீன்சுடுபதன் நன்கு அறியப் படாமையானும், பனம்பூவாயின் பொற் கொல்லரது இருந்தைத் தீப்போல் எரியும் ஆகலின் மீன்சுடல் வினை செவ்வன நடைபெறும் ஆகலானும் ஆண்டு மடல் பாளையே ஆகலும், மடலோச்சி என்னும் இடத்துப் பாளையை உணர்த்தாமல் மட்டை உணர்த்தினும் அஃது ஆகுபெயர் ஆகல் அன்றி, இயற்பெயர் ஆகாமையும், ஆகுபெயரான் வாடுமடல் ஓழிமடல் முதலாயவற்றுக்கு அவ்வுரையாளர் ஆண்டுக் கூறியவும் ஒக்கும் ஆயினும் ஈண்டுக் கூறின் உவமம் பொருந்தாமையும், ஆகுபெயரன்று, பிறவற்றுக்கும் இயற்பெயராகிய பலபொருள் ஒருசொல் எனக் கொள்ளினும் ஈண்டுப் பிறபொருள் ஏலாமையும் உணரப்படும் ஆகலின் என்பது. இன்னும் சிந்தாமணியின் 1மடற்பனைக் குழாத்திற் பிச்ச நிரைத்தன மன்னர் சூழ்ந்து எனவும், 2கொடியெழுந் தலமருங் கோயில் வாயில்கண் மடலெழுந் தலமருங் கமுகும் வாழையும் எனவும், 3பொன் மடலங் கமுகி னூசல் எனவும் பல இடத்துக்
1. இலக்கணையாரிலம்பகம் 2. இலக்கணையாரிலம்பகம் 3. குணமாலையாரிலம்பகம் |