பக்கம் எண் :

150பாயிர விருத்தி

கூறுமாற்றானும், பிறாண்டும் பல இடத்து மடல் பாளையே உணர்த்தலானும், பெரும்பாணாற்றுப் படையுள் 1பரியரைக் கமுகின் பாளையும் பசும்பூக் கருவிருந்தன்ன என்றமையால் பாளை என்பது கமுகு தென்னை பனை ஈந்து முதலாயவற்றின் பூவாம் என்று உணரப்படும் ஆகலானும், ஈண்டுப் பாளை எனக் கோடல் இழுக்கின்றாகலும் உணர்க.

இனிப் பொருநராற்றுப்படையுள் 2முடக்காஞ்சிச் செம்மருதின் மடக்கண்ண மயிலால் என்னும் இடத்து வளைந்த காஞ்சி எனப்படும், அன்றி முடம்பட்ட காஞ்சி எனல் கூடாமையின் அது வினையை உணர்த்தாது என்றமை பொருந்தாதாம். பிற எனின், அங்ஙனம் கூறல் அமையாது. என்னை; சிந்தாமணிக்கண் தழங்கு குரல் என்பது 3தழங்குரற் பம்பையிற் சாற்றி எனவும் இடுங்குகண் என்பது இடுக்கண் எனவும், குறளில் இரக்கத்தக்கார் என்பது 4இரத்தக்கார் எனவும் வந்தாற்போல முடங்கு என்னும் வினைச்சொல்லே காஞ்சியொடு புணர்ந்து முடக்காஞ்சி என்று ஆயதுஅல்லது முடம் வினைச்சொல் பொருள்பட்டு ஆங்கும் வாராமையான் என்பது.

இனி ஈண்டும் அவ்வாறு ‘முடங்கு தெங்கு’ என்பதே ‘முடத் தெங்கு’ ஆயிற்று எனக் கோடுமெனின் உவமத்திற்கு ஏலாமையின் அதுபொருந்தாது என்பது.

இனிக் குடல் என்னும் சொல் குடங்கை எனவும் குடாவடி எனவும் குடவுக்கோடு எனவும் குடம் எனவும் வருதலின் அவ்வாறே முட என்பதூஉம் முடம் எனவும் முடங்கு எனவும் முடவுக்கோடு எனவும் முடக்காஞ்சி எனவும் வந்தது எனக் கோடும் எனின் அது பொருந்தாது. என்னை? குட என்பது தட என்னும் உரிச்சொல் போன்று 5கோட்டஞ்செய்யு முரிச்சொல்லாகலின், அஃது 6இசையினுங் குறிப்பினும் பண்பினுந் தோன்றிப் பெயரினும் வினையினும்


17- வது அடி

2189- வது அடி

3நாமக்கலம்பகம்

4திருக்குறள் 1051

5தொல், சொல்லதிகாரம் 621.

6தொல், சொல்லதிகாரம் 299