மெய்தடுமாறல் இயையும் அன்றி முடம் என்பது வளைவுபற்றிய காரணப் பெயர் ஆகாமல் சிதடு செவிடு என்றாற்போல ஓர் குற்றமுடைய சினைப் பெயராகவே வழங்கலின் என்பது. அல்லதூஉம் சங்கஞ் செடியினை ஆஞ்சில் என்றும் ஆஞ்சி என்றும் பிடகநூல் வழங்கும் ஆகலின், மனிச்சரணுகாவண்ணம் முடக்கினை உடைய ஆஞ்சில் சூழ்ந்த செம்மருது எனப் பொருள்கோடலே சிறத்தலும் உணர்க. ஆஞ்சி சிறிய தனிக்கிளையுமாம். இனி அஞ்சப்படுவதனை ஆஞ்சி என்பதூஉம் நூல் வழக்கு ஆகலின் ஆஞ்சிச் செம்மருது எனக் கோடலே தக்கது. இதனைப் பொருளதிகாரத்தில் 1பேஎத்த மனைவி காஞ்சியானும் என்புழி. மனைவ யஞ்சின ஆஞ்சிக் காஞ்சி என நச்சினார்க்கினியர் உரைத்தமையானும் உணர்க. இனிப் பல்வகைப் பொருளும் அடங்குமாறு மலை நிலம் பூவே துலாக்கோல் எனவும், கழற்பெய் குடமே மடற்பனை முடத்தெங்கு குண்டிகைப் பருத்தி எனவும், நிரனிறை வகையான் ஒன்றற்கொன்று மறுதலையாகப் பிண்ட உவமம் கூறிய முதனூல் ஆசிரியன் கருத்தினை நோக்காது, நச்சினார்க்கினியர் முதலாயினார் கூறிய உரையினைத் தழுவி, நன்னூலார் சொற்பொருள் உணராமையே அன்றி 2நில மலை நிறைகோள் மலர்நிகர் மாட்சி எனவும், 3கழற்குட மடற்பனை பருத்திக் குண்டிகை முடத்தெங் கொப்பெனவு நிரனிறை சிதைத்து, தன்மையும் தாம் வேண்டியவாறே கூறித் தனி உவமம் ஆக்கினார்; அது பொருந்தாமை காட்டுதும். அவர், 4“குலனரு டெய்வங் கொள்கை மேன்மை கலைபயி றெளிவு கட்டுரை வன்மை நிலமலை நிறைகோன் மலர்நிகர் மாட்சியு முலகிய லறிவோ டுயர்குண மினையவு மமைபவ னூலுரை யாசிரி யன்னே.’’ |
எனவும்,
1தொல், சொல்லதிகாரம் 79 2பொதுப்பாயிரம் 26 3பொதுப்பாயிரம் 31 |