பக்கம் எண் :

152பாயிர விருத்தி

1“மொழிகுண மின்மையு மிழிகுண வியல்பு
 மழுக்கா றவாவஞ்ச மச்ச மாடலுங்
 கழற்குட மடற்பனை பருத்திக் குண்டிகை
 முடத்தெங் கொப்பென முரண்கொள் சிந்தையு
 முடையோ ரிலரா சிரியரா குதலே.’’

எனவும் கூறினார்; அது பொருந்தாது. என்னை? ஆத்திரையன் பேராசிரியன் உரைத்தாங்கு, தன்மை மாத்திரம் எடுத்துக் கூறி இவற்றை உடையோன் இவன் எனல் வேண்டும்; அன்றேல் முதல் நூலாசிரியன் உரைத்தாங்கு மலை முதலாய உவம மாத்திரம் கூறி அவற்றை இன்னின்ன தன்மையான் ஓப்பான் இவன் எனச் சுட்டியாயினும் சுட்டாமலாயினும் கூறல்வேண்டும்; அவ்வாறு அன்றிக் குலன் முதலாகச் சில தன்மை விதந்து கூறி உவமமும் உடன்கூறினமையின் விதந்து கூறிய அன்றிப் பிறதன்மையே உவமையால் பெறவைத்தல் வேண்டும்; அவ்வாறுமின்றிச் சில விதந்துகூறி உவமையும் கூறி விதந்து கூறியவற்றுள் சில உவமத்தில் பெறவைத்தமையானும் அங்ஙனம் கூறினும் ஈவோன் தன்மை முற்ற உணரப்படாமையானும் என்பது, இன்னும் அவர்,

2“தெரிவரும் பெருமையுந் திண்மையும் பொறையும்
 பருவ முயற்சி யளவிற் பயத்தலு
 மருவிய நன்னில மாண்பா கும்மே.’’

எனவும்,

3“அளக்க லாகா வளவும் பொருளுந்
 துளக்க லாகா நிலையுந் தோற்றமும்
 வறப்பினும் வளந்தரும் வண்மையு மலைக்கே.’’

எனவும் கூறினார்.

அதுவும் பொருந்தாது. என்னை? தெரிவரும் பெருமை முதலாயின மலைக்கும், அளக்கலாகா அளவு முதலாயின நிலத்துக்கும் ஏத்தலின் அவர் கூறியன ஒன்றற்கே உரியவாகாமையான் என்பது, இன்னும் அவர்,


1பொதுப்பாயிரம், 31

2பொதுப்பாயிரம், 27

3பொதுப்பாயிரம், 28