பக்கம் எண் :

அரசஞ் சண்முகனார்153

1“ஐயந் தீரப் பொருளை யுணர்த்தலு
 மெய்ந்நாடு நிலையு மிகுநிறை கோற்கே.’’

என்றார்.

அதுவும் பொருந்தாது. என்னை? நடுநிற்றலே, ஐயம் தீர்த்தலாக முடிதலின் அவை இருவேறு குணம் ஆகாமையின் என்பது. இன்னும் அவர்,

2“மங்கல மாகி யின்றி யமையா
 தியாவரு மகிழ்ந்து மேற்கொளா மெல்கிப்
 பொழுதின் முகமலர் வுடையது பூவே.’’

என்றார்.

அதுவும் பொருந்தாது. என்னை? மங்கல வினைக்கே அன்றி மங்கலமாகாப் பிணவினை முதலாயவற்றுக்கும் பூக்கோடலானும், பூ இன்றியே அடைகாயும் சாந்தும் மஞ்சளும் முதலாயின கொண்டும் சில மங்கலவினை நடைபெறலானும், 3துறந்தார் வெறுங்கழுத்தர் முதலாயினார் மகிழ்ந்து மேற்கோடல் இன்மையானும் என்பது. இன்னும் அவர்,

4“பெய்தமுறை யன்றிப் பிறழ வுடன்றருஞ்
 செய்தி கழற்பெய் குடத்தின் சீரே.’’

என்றார்.

அதுவும் பொருந்தாது. என்னை? குடத்துள் எப்பொருள் பெய்யினும் அப்பொருளை அக்குடம் தரும் இடத்துப் பிறழக் கொடுத்தல் இயல்பு ஆகலின், பொருள் பெய்த குடம் எனப் பொதுப்படக் கூறாது கழற்பெய் குடம் என ஒன்றனைச் சுட்டிக் கூற வேண்டாமையானும், நல்லாசிரியனும் தான் கற்ற முறையான் அன்றி மாணாக்கர் அறிவுக்கு ஏற்றவாறு வேறு முறையால் பிறழ உரைத்தலும் கூடும் ஆகலானும் என்பது. இன்னும் அவர்,

5“தானே தரக்கொளி னன்றித் தன்பான்
  மேவிக் கொளக்கொடா விடத்தது மடற்பனை.’’

என்றார்.


1.பொதுப்பாயிரம் 29.

2.பொதுப்பாயிரம் 30

3.சினேந்திரமாலை மாநிமித்த காண்டம்

4.பொதுப்பாயிரம் 32.

5.பொதுப்பாயிரம் 33.