பக்கம் எண் :

அரசஞ் சண்முகனார்155

இத்துணையும் ஈவோன்தன்மை கூறப்பட்டது. இனி ஈதல் இயற்கை உரைக்கப்படும். ஈதல் இயற்கை ஈவோன் தன்மையுள் அடங்காதோ எனின், அத்தன்மையுள் ஈதல் பொது இயல்பு விளங்கித் தோன்றியாங்கு ஈதல் சிறப்பியல்பு தோன்றாமையின் விளங்கல் பொருட்டு வேறு கூறினார் என்பது.

இனிப் பிரமசரியம் முதலாய நால்வகை நிலைபற்றிநிற்கும் ஆசிரியன் இயல்பு கூறாமை என்னை எனின்; அந்நிலை முன்கூறிய இல்நிலை வகையினும் துறவுநிலை வகையினும் அடங்கலானும், இன்னோரன்ன விகற்பமும் கூறப் புகின் வரம்பு இன்றி ஓடலானும், பிரமசரிய மலையானும் ஏனைய ஏனையவற்றானும் முறையானே எளிதின் உணர்தற்பால ஆகலானும், அவைபோல்வன ஈண்டு கூறாவிடினும் கூறியகொண்டு உய்த்து உணர்ந்து கொள்ளப்படும் என்பது.

இனி ஈதல் இயற்கை என்னை எனின்;

1“ஈத லியல்பே யியல்புறக் கிளப்பிற்
 பொழிப்பே யகல நுட்ப மெச்சமெனப்
 பழிப்பில் பல்லுரை பயின்ற நாவினன்
2புகழ்ந்த  மதியிற் பொருது மோரையிற்
 றிகழ்ந்த வறிவினன் றெய்வம் வாழ்த்திக்
 கொள்வோ னுணர்வகை யறிந்தவன் கொள்வரக்
 கொடுத்தன் மரபெனக் கூறினர் புலவர்.’’

எனக் கூறுமாற்றான் அறிக.

இனி  ஈவோன், தன் மகன் முதலாய அறுவகையாருள் ஒருவராகிச் செவ்வன் தெரிதல் முதலாய அறுவகை மாண்பும் உடையார்க்கே நூலினை ஈதல் வேண்டும் எனல் ஆன்றோர் மரபு. என்னை?


1தொல், பாயிரம், இளம்பூரணருரை மேற்கோள்

2புகழ்ந்தநாளெனவும் பாடம்