பக்கம் எண் :

156பாயிர விருத்தி

1“தன்மக னாசான் மகனே மன்மகன்
 பொருணனி கொடுப்போன் வழிபடு வோனே
 யுரைகோ ளாளனோ டிவரென மொழிப.’’

எனவும்,

2“செவ்வன் றெரிகிற்பான் மெய்ந்நோக்கிக் காண்கிற்பான்
 பல்லுரையுங் கேட்பான் மிகப்பெரிதுங் காதலான
 தெய்வத்தைப் போல மதிப்பான் திரிபில்லா
 னிவ்வாறு மாண்பு முடையார்க் குரைப்பவே
 செவ்விதி னூலைத் தெரிந்து.’’

எனவும் கூறலான் என்பது.

இனித் தந்தைக்கே முற்றும் உரிய கடப்பாடு மகற்குக் கல்வி பயிற்றல் என்பது,

3“தந்தை மகற்காற்று நன்றி யவையத்து
  முந்தி யிருப்பச் செயல்.’’

என வள்ளுவனார் கூறலால் பெறப்படலின் தன் மகனை முன் கூறினார்.

4“எந்நன்றி கொன்றார்க்கு முய்வுண்டா முய்வில்லைச்
  செய்ந்நன்றி கொன்றை மகற்கு.’’

என்றார் ஆகலின் ஆசிரியன் செய்த நன்றி மறவாமல் அவன் மகற்கும் கற்பித்தல் வேண்டும் ஆகலானும், அக்கடப்பாடு தன் மகன் பொருட்டாம் கடப்பாடுபோல, தனக்கே முற்றும் உரித்து ஆகாமல் தன் ஆசிரியன் மருங்கு தன்னொடு கற்ற ஏனோர்க்கும் உரித்து ஆகலானும், தன் மகற்குப் பின்னர் ஆசான் மகனைக் கூறினார்.


1தொல், பாயிரம் இளம்பூரணருரை மேற்கோள்

2தொல், பாயிரம் இளம்பூரணருரை மேற்கோள்

3திருக்குறள் 67

4திருக்குறள் 110.