பக்கம் எண் :

160பாயிர விருத்தி

அவை எல்லாம் இலனாயினும் அடுநோய்ப்பிணி உள்வழி, 1அறிவினை நிச்ச நிரப்புக் கொல்லும் எனவும், 2வறியாரிருமையறியார் எனவும், 3கொடிது 3கொடிது வறுமை கொடிதே, யதனினுங் கொடிதே யிளமையில் வறுமை, யதனினுங் கொடிதே யாற்றொணாக் கொடுநோய் எனவும் கூறினார் ஆகலின், கற்பதன்கண் ஊக்கம் அழித்தலே அன்றிக் கற்றனவும் அழித்து மிக்க துன்புறுத்தும் ஆகலின், அவனை அவர்க்குப் பின் கூறினார். தனக்கே அன்றி இனத்துக்குக் கேடுபயவாமையும் தனக்கும் ஒருதலையாகக் கேடுபயவாமையும் உடைய நோயும் இலனாயினும் மாறாச் சினம் உள்வழி,

4“சினமென்னுஞ் சேர்ந்தாரைக் கொல்லி யினமென்னு
 மேமப் புனணயைச் சுடும்.’’

எனவும்,

5“சினத்தைப் பொருளென்று கொண்டவன் கேடு
 நிலத்தறைந்தான் கைபிழையா தற்று.’’

எனவும்,

6காவாக்காற் றன்னையே கொல்லுஞ் சினம் எனவும் கூறினார். ஆகலின், அச்சினம் இனத்தையும் சுட்டுத் தனக்கும் தப்பாது கேடு பயத்தலின், அவனை அவர்க்குப் பின் கூறினார். ஒருகாலைச் சுடப்பட்டார் பின்னரும் சுடாமல் காத்துக்கோடற்கு உரிய அச்சினத்தீயும் இல்லாயினும் தடுமாறும் நெஞ்சம் உள்வழிச், சினம் உடையாரைப் போன்று கடிதின் விலக்கக்கூடாமையான் பன்னாளும் தனக்கே அன்றித் தன்னோடு கற்பார்க்கும் தன் ஆசிரியற்கும் கற்றோர் பிறர்க்கும் இன்னல் விளைத்தலின் அவரை அவர்க்குப் பின் கூறினார்.

இனிக் கொள்வோன் தன்மை உரைக்கற்பாற்று.

அது பயன்படலும் படாமையும் பற்றி, கற்பித்தற்குத் தகுதி உடைத்து ஆகலானும், ஆகாமையானும், கற்பிக்கப்படும் தன்மையும் படாத்தன்மையும் என இருவகைப்படும்.


1.திருக்குறள் 532

2.சிற்றம்பலக்கோவை

3.ஒளவையார் பாடல்

4.திருக்குறள் 306

5.திருக்குறள் 307

6.திருக்குறள் 305