பக்கம் எண் :

162பாயிர விருத்தி

விரிதலின் இருபெயரொட்டு; வினைத்தொகை அன்று. மின் என்னும் முதனிலை மின்னும் பொருளை உணர்த்தியாங்குப் பன் என்னும் முதனிலையும் பன்னிய பொருளை உணர்த்தலின் ஆகுபெயர். பன்னல் பின்னல் நெய்தல் என்பன ஒருபொருள. ஆடை என்னும் உவமப்பெயர் ஆடைபோல மரத்தின் அரையினைச் சுற்றும் பொருளை உணர்த்திற்று.

இனி ஆனேறு என்பது, ஆனாகிய ஏறு என விரியும். பெற்றத்தின் ஆண்பால் பெண்பாலுக்குப் பொதுவாய ‘ஆ’ என்பது, முதல் திரிந்த ‘இன்’ சாரியையொடு புணர்ந்து, ‘ஆன்’ என்று ஆயிற்று. ஏறு என்பது, பெற்றம் முதலாயவற்றின் ஆண்பால் பெயர்.

இனிக் ‘குரங்கெரி விலங்கா யெருமை’ என்பது, குரங்கும் எரியும் விலங்கும் ஆயெருமையும் எனப் பொருள்படும். எரி என்றது, தீயினை. விலங்கு என்றது, வேந்தன் ஆணையால் குற்றம் செய்தாரது காலினும் கையினும் புனையும் புனையை. ஆயெருமை என்றது, கன்று ஈன்று இழந்த தாய் எருமையை. ஆய், தாய் என்பன ஒரு பொருள. அப்பெயர் அஃறிணைக்கும் உரிமையாதலைப் 1பல்லாவுளுய்த்து விடினுங் குழக்கன்று வல்லதாந் தாய்நாடிக் கோடலை என்றமையானும் உணர்க. ‘கற்றா’ என்றாற் போலக் கன்றொடு புணர்க்காமல் ‘ஆயெருமை’ என்றமையால் கன்று இன்றித் தாய் என்னும் தன்மை ஒன்றே உடைய எருமை எனப் பொருள் உணர்த்திற்று.

இனிப் பிறர் எல்லாம் நன்னீரத்தை நன்னிறம் எனப் பாடம் ஓதினார். இலக்கணவிளக்க நூலார் எந்நிறம் தோய்தற்கும் ஏற்பது நன்னிறம் எனத் தன்மையும் கூறினார். அஃது ஆசிரியர் கருத்து அன்று. என்னை?

2“வினைபயன் மெய்யுரு வென்ற நான்கே
  வகைபெற வந்த வுவமத் தோற்றம்.’’

எனவும்,

3“சிறப்பே நலனே காதல் வலியோ
  டந்நாற் பண்பு நிலைக்கள மென்ப.’’

எனவும்,


1நாலடி

2தொல், பொருள், 276

3தொல் பொருள் 279