பக்கம் எண் :

அரசஞ் சண்முகனார்163

1“கிழக்கிடு பொருளோ டைந்து மாகும்.’’

எனவும்,

2“முதலுஞ் சினையுமென் றாயிரு பொருட்கு
  நுதலிய மரபி னுரியவை யுரிய.’’

எனவும் கூறினார் ஆகலின், வினைமுதலாய நால்வகை உவமமும் சிறப்பு முதலாய ஐவகை நிலைக்களத்துள் ஒன்றுபற்றி வருங்கால் அவ்உவமமும் பொருளும், முதலும் முதலும் சினையும் சினையும் எனவாயினும் முதலும் சினையும் சினையும் முதலும் என மாறியாயினும் வருதலன்றி, நன்னிறம் பண்பு மாணாக்கன் முதலுமாகலின் பண்பு முதலுமென மயங்கல் கூடாமையானும், உவமத்திற்கும் பொருட்கும் பொதுவாகிய ஒப்புமைக் குணம் யாதானும் ஒன்று இல்வழி உவமமும், பண்பிற்குப் பண்பும் இல்லை ஆகலின், நன்னிறம் என்னும் பண்பிற்கு ஒப்புமைக் குணம் ஒன்று கோடல் இலக்கணம் ஆகாமையான் அஃது உவமம் என வாராமையானும், பண்பிற்குப் பண்பு இன்றாயினும் காதல்பற்றி உளது எனக் கோடும் எனில் காதலும் யாதானும் ஒரு பொருளைப்பற்றி அப்பொருளது பண்பில் தோன்றுமன்றி, பொருளைச் சுட்டாது பண்புமாத்திரையில் தோன்றாமையானும், நன்னிறம் அன்று; நன்னிறம் உடைப்பொருளே உவமமாயிற்று எனின் அப்பண்புடைப் பொருள் ஒன்று எனல் இன்றிப் பல்கோடி உண்மையின் அவற்றுள் இஃது எனச் சுட்டாமையான் ஒப்புமைக் குணம் இன்னது என்று உணரல் எவ்வாற்றானும் இயையாமையானும், நல்வினை தீவினை என்றாற்போல ஆண்டு நியதமாகல் இன்றிக் கூறுவான் குறிப்பின்வண்ணம் வெண்மை முதலாய நிறம் நல்லன தீயன எனப்படுமன்றி, இது நன்னிறம் இது தீயநிறம் என்னும் வழக்கு யாண்டும் இன்மையின், நன்னிறம் எனப் பொதுமைகூறி எந்நிறம் தோய்தற்கும் ஏற்கும் எனல் ஏலாமையானும் என்பது.

இனிக் ‘குரங்கெரி விலங்கா யெருமை’ என்றதனைப் பிறர் எல்லாம் ‘குரங்கெறி விளங்கா யெருமை’ எனப் பாடம் ஒதினார். இலக்கணவிளக்க நூலார் ‘கல்லால் எறிந்து கருதுபயன் கொள்வோன் குரங்கெறி விளங்காயாம்’ எனத் தன்மையும் கூறி, ‘குரங்கெறி


1தொல், பொருள் 280

2தொல், பொருள் 281