பக்கம் எண் :

அரசஞ் சண்முகனார்201

ஓர் ஆண்டிற்கு ஒருவர் பிறர் கவியரங்கேறித் தலைவராகிய வந்தமையானும், விரிசடைக் கடவுளும் முருகவேளும் தமிழுக்கு ஆதி முதல்வர் ஆகலின் தெய்வ சாட்சியாகக் கொள்ளப்பட்டமையானும், கவியரங்கேறிய எழுவர் பாண்டியரும் தலைவராக இருந்து சங்கம் நடாத்தற்குக் குறித்த ஆண்டின்கண் தாம் அரசராகலின் தமக்காகப் பிறர் ஒருவரைத் தெரிந்து வைத்தமையானும், அவ் ஒன்பதின்மரொடு ஆண்டிற்கு ஒருவராக எண்ண, பாடினோர் நாலாயிரத்து நானூற்று நாற்பத்து ஒன்பதின்மர் ஆயினர் என்பதூஉம் உணரப்படும். அங்ஙனம் கொள்ளின் அதங்கோட்டாசிரியர் தலைவராய ஆண்டில் இந்நூல் அரங்கேற்றப்பட்டது என்பதூஉம் விளங்கும். இவ்வாறு கொள்ளாக்கால் ஆசிரியர் அகத்தியனார் இருப்பப் பாண்டியன் அதங்கோட்டாசிரியரைத் தலைவராக இருத்தி இந்நூலைக் கேட்பியான் என்பது.

“இனி இடைச்சங்கம் இருந்தார் அகத்தியனாரும், தொல்காப்பியனாரும், இருந்தையூர்க் கருங்கோழி மோசியும், வெள்ளுர்க் காப்பியனும், சிறுபாண்டரங்கனும், திரையன் மாறனும், துவரைக் கோமானும், கீரந்தையும் என இத்தொடக்கத்தார் ஐம்பத்தொன்பதின்மர் என்ப. அவர் உள்ளிட்டு மூவாயிரத்து எழுநூற்றுவர் பாடினார் என்ப. அவர்களால் பாடப்பட்டன கலியும் குருகும் வெண்டாளியும் வியாழமாலை அகவலும் என இத்தொடக்கத்தன என்ப. அவர்க்கு நூல் அகத்தியமும் தொல்காப்பியமும் மாபுராணமும் இசைநுணுக்கமும் பூதபுராணமும் என இவை. அவர் மூவாயிரத்து எழுநூற்றி யாண்டு சங்கம் இருந்தார் என்ப. அவரைச் சங்கமிரீஇயினார் வெண்டேர்ச்செழியன் முதலாக முடத்திருமாறன் ஈறாக ஐம்பத்தொன்பதின்மர் என்ப. அவருள் கவியரங்கேறினார் ஐவர் பாண்டியர் என்ப. அவர் சங்கமிருந்து தமிழாராய்ந்தது கபாட புரத்து என்பது. அக்காலத்துப் போலும் பாண்டிய நாட்டைக் கடல் கொண்டது.’’ என இடைச்சங்க வரலாறு காணப்படலின், ஒரு தலைமுறைக்கு ஏறக்குறைய அறுபத்து மூன்று யாண்டாக எண்ண, அச்சங்கம் மூவாயிரத்து எழுநூற்றி யாண்டு நிலைபெற்றது என்பதூஉம், ஒரு தலைமுறைக்கு ஒருவரே பாண்டியர்க்குப் பக்கத் துணையாக என்றும் இருந்தமையின் சங்கம் ஐம்பத்து ஒன்பதின்மர் ஆயினர் என்பதூஉம், ஓர் ஆண்டிற்கு ஒருவராகக் கவியரங்கேறித் தலைவரானமையால் பாடினோர் மூவாயிரத்து எழுநூற்றுவர்