பக்கம் எண் :

206பாயிர விருத்தி

ஐந்திரம் என்பது வடமொழிக்கு இலக்கணம் கூறும் நூல். முன்னர்த் தமிழுக்கு வடவேங்கடம் தென்குமரி என எல்லை கூறினமையானும், 1வடசொற் கிளவி வடவெழுத் தொரீஇ, என நூலுள் கூறுதலானும், அவ்வேங்கடத்தின் வடக்கும் இமயத்தின் தெற்கும் அதற்கு எல்லையாதல் உணரப்படும். இக்காரணம்பற்றியே ஆரியம் வடமொழி எனவும் தமிழ் தென்மொழி எனவும் பெயர் பெற்றன. இனி ஆரியம் வடதிசை மொழியே எனினும் ஆசிரியர் அகத்தியனார் போந்த பின்னர்த் தென்திசையினும் வழங்கிற்று ஆகலின் மல்குநீர் வரைப்பின் ஐந்திரம் என்றார். இனி ஆரியத்துக்கு வடபால் எல்லை இமயமலையாம் என்பது 2ஆரியர் துவன்றிய பேரிசை யிமயந் தென்னங் குமரியொ டாயிடை என்பதனான் விளங்கும்.

இனிச் செந்தமிழியற்கை சிவணிய நிலத்தொடு முந்துநூல் கண்டு என்றதனானே தமிழ் நிறைந்தான் என்பது பெறப்படலான், ஈண்டு அத்தமிழே அன்றி வடமொழியும் நிறைந்தான் என்பது விளங்க ஐந்திரம் நிறைந்தோன் என்றார். இன்னும் இதனானே ஆசிரியர் அகத்தியனார்,

“ஏழியன் முறைய தெதிர்முக வேற்றுமை
 வேறென விளம்பான் பெயரது விகாரமென்
 றோதிய புலவனு முளனொரு வகையா
 னிந்திர னெட்டாம் வேற்றுமை யென்றனன்.’’

எனப் பிருகற்பதி கொள்கையை மேற்கொள்ளாமல் இந்திரன் கொள்கையே மேற்கொண்டார் ஆகலானும் அவ்வாறே இவ்ஆசிரியனும் 3வேற்றுமை தாமே யேழென மொழிப எனப் பிறன்கோள் கூறி 4விளிகொள் வதன்கண் விளியோ டெட்டே என்று இந்திரன் கோளைத் தன் கோளாக்கினமையானும், இவ்வாசிரியனுக்கு ஐந்திரம் அளித்த ஆசிரியனும் அகத்தியனாம் என்பது பெறப்பட்டது.

இனித் தொல்காப்பியன் என்பது ரகு மரபின் அவதாரம் செய்த நெடியோற்க்கு ராகவன் எனப் பெயர் எய்தியாங்கு இவ்ஆசிரியர்க்கு


1தொல், சொல், 401

2பதிற்றுப்பத்து 11

3தொல், சொல் 63

4தொல், சொல் 64