பக்கம் எண் :

அரசஞ் சண்முகனார்207

மரபுபற்றி வந்த பெயர். என்னை? இவ்ஆசிரியர் கவியின் மரபினுதித்த சமதக்கினி இருடியின் மகனார் ஆகலானும், அம்மரபின்வந்த இருடிகள் எல்லாருள்ளும் சிறந்தோராகலானும், ஆரியமொழிக்கண் ‘காவியன்’ எனவும் அப்பெயரே தற்பவமாகித் தமிழில் ‘காப்பியன்’ எனவும் வழங்கல் பொருந்துமாகலானும், ஆரியமொழியுள் ‘கவி’ என்பது பிரமனையும் அவன் வழிவந்த முனிவர் சிலரையும் பிறரையும் உணர்த்தும் ஆகலின் அவருள் பிரமனை உணர்த்துமாறு ‘தொன்மை’ என்னும் அடை புணர்த்துத் ‘தொல்காப்பியன்’ என வழங்கினமையானும் என்பது.

பல்புகழாவன இயற்கையாகிய நுண்ணறிவானும் செயற்கையாகிய கல்வி அறிவானும் வந்த புகழும், அவ்அறிவானே நூல் இயற்றி நமக்கும் பயன்பட அளித்த புகழும், தவ ஒழுக்கத்தான் வந்த புகழும், அவ்வொழுக்கத்தான் 1ஒன்னார்த் தெறலு முவந்தாரை யாக்கலும் 2கூற்றங் குதித்தலும் முதலாயினவும் ஞானமும் அமைதலான் வந்த புகழுமாம்.

இனிஇந்நூலை அதங்கோட்டாசிரியற்குக் காட்டிய காலம் வரையறையான் இத்துணைத்து என்று அறியப்படாவிடினும் பாண்டிய நாட்டைக் கடல் கொள்ளும் முன்னர்த் தென்மதுரையில் அரங்கேற்றப்பட்டமையானும், அந்நாட்டைக் கடல் கொண்ட பின்னர்க் கபாடபுரத்துச் சங்கம் இருந்த காலத்தே இராமன் இலங்கை சென்றமையானும், அவன் காலத்திற்குமுன் என்பது தேற்றம் ஆகலின், ஆசாற்குக் காட்டியபின் அன்றுதொட்டு இன்றும் தொல்காப்பியன் என்னும் பெயர் மறையாது தோன்றலும், அத்தோற்றத்தால் அவனது பல்புகழ் நிலையலும் உணரப்படலின், அம்முறையானே காட்டித் தோற்றி நிறுத்த எனக் கூறினார்.

ஒருவன் முற்ற உணர்ந்தானாயினும் அக்கல்வியறிவு ஒன்றே கொண்டு நூல்செய்யத் தொடங்கின்,

3“நுண்ணிய நூல்பல கற்பினு மற்றுந்த
 னுண்மை யறிவே மிகும்.’’

எனவும்


1குறள் 264

2குறள் 269

3குறள் 373