1“காதன் மிக்குழிக் கற்றவுங் கைகொடா வாதல் கண்ணகத் தஞ்சனம் போலுமால்.’’ |
எனவும் சான்றோர் கூறினார் ஆகலின் ஊழ்வயத்தால் மயங்கல் இயற்கை ஆகலானும், அவ்வியற்கை மறுவில் செய்தி மூவகைக் காலமும் நெறியின் ஆற்றிய அறிவர்க்குக் கெடும் ஆகலானும், இந்நூலகத்து ஊழ்வயத்தான் எய்தற்பாலவாய குற்றமும் இல்லாமைக்குக் காரணம் தவமாம் என்பது விளங்க நிறுத்தபடிமை என்றார். இவ்வாற்றான் இவ்வாசிரியன் தவத்தான் மறுவில் செய்தி மூவகைக் காலமும் நெறியின் ஆற்றிய அறிவன் ஆகலின் 2கற்றோரறியா வறிவுங் கற்றோர்க்குத் தான்வரம் பாகிய தலைமையுங் காமமொடு கடுஞ்சினங் கடிந்த காட்சியு மிடும்பை யாவது மறியா வியல்பு முடைய துனியில் காட்சி முனிவனாம் என்பது பெறப்பட்டது. இங்ஙனம் பல்புகழ் நிறுத்தற்குக் காரணம் படிமையே ஆகலின் இறுத்த என்னும் எச்சம் படிமையோன் என்பதன்கண் படிமை என்னும் காரணப்பெயர் கொண்டது. இனி ஆக்கியோன் பெயர் கூறல் என்கருதியோ எனின் நூல் கேட்பான் புக்க மாணாக்கன் இந்நூல் உயர்ந்தோன் செய்ததோ அன்றோ என ஐயுற்று இடர்ப்படுமாகலின், அதனை ஒழித்து அவனைக் கற்றற்கண் ஊக்கற் பொருட்டு என்பது. அது கருத்தாயின் கண்டு எண்ணித் தொகுத்தான் பல்புகழ் நிறுத்த படிமையோன் என்றமையானே அவன் உயர்ந்தோன் என்பது பெறப்படலின் ஐந்திரம் நிறைந்தமை கூறல்வேண்டா என்பது கடா. அங்ஙனம் கூறாவழித் தமிழ் மரபொடு மாறுபடாமையின் விளி கொள்வதற்கண் விளியோடு எட்டே என்றாற்போல்வ சில இந்திரன்கோளும் இந்நூலுள் கூறலானும், முந்துநூல் கண்டு எனப் பொதுப்படக் கூறலானும், இந்நூலுக்கு ஐந்திரமும் முதல் நூலாமோ
1சிந்தாமணி, கனகமாலையாரிலம்பகம் 76 2திருமுருகாற்றுப்படை 133-137. |