இனிக் காருகபத்தியமும் ஆகவநீயமும் தக்கினாக்கினியும் என்பன முத்தீ எனப்படும். அவற்றொடு சப்பியமும் ஆவசத்தியமும் கூடின் ஐந்தீ எனப்படும். மனையாளுடன் இல்லத்துள் ஓம்பும் தீ ஒளபாசனம் எனப்படும். ஊண் அடு தீ என்பது அட்டில் தீயினை. தீக்கடவுள் ஒளித்துப் புக்கமையான் அரசும், இரதத்துக்கு இருப்பிடமென வேதம் புகழ்வதால் அத்தியும், துறக்கத்திருந்து நிலவுலகத்துப் போந்தமையால் புரசும், அக்கடவுளின் குரோதத்தைச் சமம் செய்தலால் சமி எனப்படும் வன்னியும், அக்கடவுளின் ஒளி இருத்தலால், களாவும் மேகத்தின் இயைபான் ஓர் ஒளி தங்கலின் இடிவீழ்மரனும், யாகபதியாகிய மாயோன் இருப்பிடம் ஆதலின் தாமரை இலையும் என, அவ் ஏழும் அக்கடவுட்கு ஆசனம் ஆதற்கு உரிய ஆயின. தீக்கடவுளின் குரோதத்தைச் சமம்செய்யும் வன்னிமரனுடைய மலை வினைத்தீயின் குரோதத்தைச் சமன் செயற்பொருட்டு வேள்வி செய்யும் அந்தணர் இயல்பைக் குறிக்கும். இனி ஓதுவிப்பார், மாணாக்கர் ஓதுங்காலைத் தாம் ஓதார் ஆகலானும் வேட்பிப்போர், வேட்போரது தீயினைக் கொண்டன்றித் தமது தீயால் வேட்டல் செய்வியார் ஆகலானும், அம்மலை ஓதலும் தீயும் தான் ஒழியாது கோடலின் அவ்விரண்டனை இன்று எனல் அறியப்படும். இனி நிலன், பயிற்றுவார் பயில்வாரை ஓதுவித்தாற் போல உழவரை உழுங்காலை ஏர் நடத்தற்பொருட்டு ஒலிப்பச் செயலின் ஓதுவித்தலும் தன் வளங்கொண்டு 1பகடு நடந்த கூழ் பல்லாரோ டுண்க எனவும், 2“பகுத்துண்டு பல்லுயி ரோம்புத னூலோர் தொகுத்தவற்று ளெல்லாந் தலை.’’ |
எனவும், 3“பரிந்தோம்பிப் பற்றற்றே மென்பர் விருந்தோம்பி வேள்வி தலைப்படா தார்.’’ |
1நாலடி 2. 2திருக்குறள் 322. 3திருக்குறள் 88. |