எனவும் கூறினர் ஆகலின், அவ்வாறு ஓம்பி வேள்விதலைப்படச் செய்வித்தலான் வேட்பித்தலும் என அவ் இருதொழிலுடைத்து. இனி நிலன் இவ்வாற்றான் அந்தணர்க்கு உவமம் ஆயிற்று. இனி நிலம் தன் புதல்வராய உழவரும் கணவனாய அரசனும் என அச்சுற்றமன்றிப் பிறர்க்கு அளியாமையின் அந்தணர்க்கு இயல்வதாகிய விருந்து புறந்தரல் என்னும் ஈகையினை இன்று. பூ தன்கண் உள்ளே தேன் சிறிதளவிற்று ஆயினும் அதிதியாகிய தும்பிக்கு முகமலர்ந்து அளித்து விருந்து புறந்தரலின் அவ்ஈகை உடைத்து. சத்துப்பிரத்தன் என்னும் அந்தணன் ஒருவன் அறக்கடவுளாகிய அதிதிக்குத் தன் இல்லத்து உள்ள சிறிதளவிற்றாய நெல்மாவினை அளித்தாங்கு அளித்தல் அந்தணர் ஈகை. அப்பூ, தன் முதலாகிய கொடி முதலாயின நீர் இரப்பினும் தான் ஒன்றும் இரவாமையின் ஏற்றல் இன்று. இனி, 1“வாணிகஞ் செய்வார்க்கு வாணிகம் பேணிப் பிறவுந் தமபோற் செயல்.’’ |
என்றார் ஆகலின், துலாக்கோல் அவ்வாறு விலைப்பொருளுள் ஊதியம் ஏற்றல் உடைத்து, ஊதியம் ஒழிந்து எஞ்சிய விலை பொருட்கு ஈடாதலின் அஃது ஏற்றல் பொருளாகாமை காண்க. இனி, 2“நிலம்பொறை யாற்றா நிதிபல கொண்டுங் குலம்பெறுதீங் கந்தணர் கொள்ளார்’’ |
என்றார் ஆகலின், வேட்பித்தல் முதலாய நெறியான் அன்றி ஏலார் அந்தணர்.
1திருக்குறள் 120 2தொல்காப்பியம் பொருளதிகாரம் 16 வது பக்கம், 19 வது வரி |