பக்கம் எண் :

அரசஞ் சண்முகனார்43

இனி அப்பருத்தி, நீரினைச் சிறார் வலிதிற்பெய்யினும் அதனைத் தன்னகத்துள் கொள்ளாது மிதத்தலான், ஏற்றலையின்று ஆதலின் துலாக்கோலின் மறுதலைத் தன்மைத்து.

இவ்வாற்றான் அந்தணர் வருணத்துள் ஆசிரியன் அல்லாதானது தன்மை உணரப்படும்.

இனி அரசர் இயல்பு என்னை எனின், ஓதலும் வேட்டலும் ஈதலும் காத்தலும் தண்டமும் என 1ஐவகை மரபி னரசர் பக்கம் என்பது.

இனி அந்தணர்க்கு சிறப்பியல்பு எனக் கூறியவற்றுள் ஓதல் முதலாய மூன்றனை அரசர்க்கும் கூறுதல் என்னை எனின், அவை வினை நிகழ்ச்சியான் ஒருதன்மைய ஆயினும் அவ்வவ் வருணத்துக்குரிய சிலவேறுபாடும் உடைமையின் அதுபற்றி அரசர்க்கும் சிறப்பியல்பாயின என்பது. இஃது ஏனோர்க்கும் ஒக்கும். அவற்றின் விகற்பங்களை எல்லாம் தனித்தனிக் கூறப்புகின் விரியும், ஆதலின் ஈண்டுக் கூறும் உவமவாயிலான் அன்றிப் போதாயனம் மனு பாரதம் முதலாய நூல்கொண்டும் உணர்க.

இனிச் சில கூறி ஏனையவும் இன்ன என்று ஒழியாமல் எல்லாவகையும் உரைக்கப்புக்க என்னையோ எனின், நூலுள் அறு வகைப்பட்ட பார்ப்பனப் பக்கமும் ஒன்றன் தொடக்கத்துச் சூத்திரம் முதலாகப் பல சூத்திரங்கட்கு இம்முறை கொண்டே உரையினைத் தூய்தாக்கப்படுமாதலின், ஆங்கெல்லாம் இதனைத் தனித்தனி எடுத்துக்காட்டல் கூடாமையின் ஈங்குக் கூறல் இன்றியமையாமை ஆயிற்று என்பது.

இனி அரசர் உலகு காத்தல் உடையராதலின் போர் முதலாய வினையால் காலம் இடையிடினும் அமையும் என நூல் விதித்தலின், மலையின் ஒலிவகை நான்கனுள் மழை ஒலி அவர்க்கு உவமம் ஆயிற்று.

வேட்டலுள்ளும் பிருகற்பதிசவனம் அந்தணர்க்கும் இராசசூயமும் துரங்கவேள்வியும் அரசர்க்கும் சோமயாகம்


1தொல், பொருளதிகாரம் 75 வது சூத்திரம்.