வணிகர்க்கும் உரியவும் ஏனைய பொதுவும் ஆதலின், அங்கியங் கடவுன் அச்சுவ உருக்கொண்டு புக்கொளித்த அரசினையுடைய அம்மலை அச்சுவவேள்விக்கு உரிய அரசர்க்கு வேட்டல் தொழில்பற்றி உவமம் ஆயிற்று. இவ்வாற்றான் அரசர் தொழிலுள் ஓதலும் வேட்டலும் பெறப்பட்டன. இனி மலை 1நறுந்தண் டகரம் வகுள மிவற்றை வெறும்புதல் போல் வேண்டாது வெட்டி யெறிந்துழுது செந்தினை வித்துந் தன், சுற்றமாகிய குறிஞ்சி நில மாக்களுக்கு மிகப் பயன்படச்செய்யாமல் ஏனைய நிலமாக்களுக்கு அருவி நீரைப் பயன்படுத்தலின் அரசர்க்குரிய ஈகை இன்று. இனி நிலன் தன்மாட்டுத் தொடர்புடைய சுற்றத்துக்கே அவர் வேண்டுவனவற்றை இன்சொல்லுடன் ஈதல் உடைத்து. இன்சொல் என்றது இனிய நெல்லினை. இனி, 2“இன்சொலா லீத்தளிக்க வல்லார்க்குத் தன்சொலாற் றான்கண் டனைத்திவ் வுலகு.’’ |
என்றார் ஆகலின் அவ்ஈகை உடையார் அரசர் எனப்படுவார். அரசன் உலகு காக்கும் பேரறம் உடையான் ஆகலானும் அக்காத்தல் தொழிற்கு இன்றியமையாப் பொருளை அத்தொழில் நிலை பெறுமாறு தம் உயிரும் கொடுப்போராாய தன் படையாளர் என்னும் சுற்றத்துக்கு அளித்தலே இன்றியமையாமை ஆகும் ஆதலின் பிறர்க்கு அளியாவிடினும் குற்றம் ஆகாமையானும் நிலத்தின் ஈகையே அவர்க்கு இயலும் ஈகை ஆயிற்று. இனி நிலன் பயிர்க்குக் கேடு விளைக்கும் பன்றி முதலாயவற்றையும் களையினையும் கள்வரையும் கடியாமையின் காத்தலை இன்று.
1தொல், பொருளதிகாரம் 299- வது பக்கம் 2திருக்குறள் 387 |