பக்கம் எண் :

அரசஞ் சண்முகனார்45

இனிப் பூ.

1“பிணியின்மை செல்வம் விளைவின்ப மேம
 மணியென்ப நாட்டிற்கிவ் வைந்து.’’

என்றார் ஆகலின் அவ்ஐந்தியல்பும் உடைய அகத்து இதழாகிய தன் நாட்டுள் புக்க தும்பியாகிய குடி அதன் காவலானும்,

2“சிறுகாப்பிற் பேரிடத்த தாகி யுறுபகை
  யூக்க மழிப்ப தரண்.’’

என்றார் ஆகலின் அவ்வியல்பினவாகிய புறவிதழ் என்னும் அரணின் காவலானும் ஈ முதலாய பிறவற்றான் நலிவுறாமல் காக்கப்படுதலின் குடி புறங் காத்தோம்பல் உடைத்து.

இனி,

3“ஆபயன் குன்று மறுதொழிலோர் நூன்மறப்பர்
  காவலன் காவா னெனின்.’’

என்றார் ஆகலின் அவ்வண்ணம் அப்பூ தும்பியைக் காவாவிடில் காம்பின் பயனாகிய தேன் ஞாயிற்றின் ஒளியால் குன்றுதலும் அறு தாள் தும்பி இசைநூல் மறத்தலும் அறிக. இவ்வாற்றால் காத்தல் பெறப்பட்டது. அப்பூ தன் குடியாகிய தும்பி கள் உண்டு களித்த இடத்தும் ஒறுத்தல் செய்யாமையின் தண்டம் இன்று.

இனி,

4“குடிபுறங் காத்தோம்பிக் குற்றங் கடிதல்
  வடுவன்று வேந்தன் றொழில்.’’

எனவும்,

5“கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்
  களைகட் டதனொடு நேர்.’’

1திருக்குறள் 738

2திருக்குறள் 744

3திருக்குறள் 560

4திருக்குறள் 549

5திருக்குறள் 550