பக்கம் எண் :

அரசஞ் சண்முகனார்77

அக்குடம், உயர்விலைப் பொருளாகிய குடிப்பிறப்பு எய்தாமையால் சிற்றினமாகிய சிறார்களைச் சுற்றமாச் சூழ்ந்து பெரியாரொடு கூடாமையின் இனம் தூய்மை இன்று.

அப்பனை, கள் ஏற்கும் இழிகுலத்தாரது பரிசயத்தானே கள்ளாகிய இழிபொருள் கோடலின் மனம் தூய்மை இன்று.

அத்தெங்கு, தன்னைச் சூழ்ந்து நெருக்கித் தான் ஈயாவண்ணம் ஞாயிற்றின் ஒளி தடுப்ப ஏனைத் தெங்குகளை மிக அடுத்துவைத்த தம் குற்றம் காணாராகி, இன்னும் பாளை ஈன்றிலது எனத் தன்னை நீந்திக்கும் இழிந்தாராது பரிசயத்தானே நல்லவை நாடி இனிய தரலின்று.

அப்பருத்தி, 1சிற்றின்பம் வெஃகி யறனல்ல செய்யும் சிறாரது பரிசயத்தானே தானும் ஆடைக்குக் காரணமாகிய பஞ்சளிக்கும் அறவினையென்னும் மற்று இன்பம் வேண்டாமையின் செய்வினை தூய்மை இன்று.

அல்லாதான் இழிகுலத்தான் ஆதலின் சிற்றினம் அஞ்சாமல் அதனையே சுற்றமாச் சூழ்ந்துவிடலின் தூய்மை இலன்.

இனி மனம் தூய்மை முதலாய மூன்றற்கு இனந்தூய்மையும், இனந்தூய்மைக்குச் சிற்றினம் அஞ்சலும், சிற்றினம் அஞ்சற்குக் குடிப் பிறப்பும் காரணமாதலின் அம்முறையானே குடிப்பிறப்பின் பின்னர்த் தூய்மை கூறப்பட்டது என்பது.

இனி ஒழுக்கத்தின் வகை என்னையோ எனின்,

2“பொறிவாயி லைந்தவித்தான் பொய்தீ ரொழுக்க
 நெறிநின்றார் நீடுவாழ் வார்.’’

எனவும்,

3“உலகத்தோ டொட்ட வொழுகல் பலகற்றுங்
 கல்லா ரறிவிலா தார்.’’

எனவும் கூறினாராதலின் ஐந்தவித்தான் விதித்தன செய்தலும், அவன் விலக்கியன ஒழிதலும், உயர்ந்தோர் பலரும் ஒழுகிய வாற்றானே


1திருக்குறள் 173

2திருக்குறள் 6

3திருக்குறள் 140