பக்கம் எண் :

78பாயிர விருத்தி

ஐந்தவித்தான் சொல்லியவற்றுள் அக்காலத்திற்கு ஏலாதன ஒழிதலும், அவன் சொல்லாதவற்றுள் ஏற்பன கொள்ளலும் என அவ் ஒழுக்கம் நான்கு வகைத்து.

அவற்றுள் மலை, தூய்மை காரணமாக ஐந்தவித்தான் கருத்தின் வண்ணம் வளம் பல படைத்தலின் விதித்தன செய்தல் உடைத்து.

நிலன், உழவர் விலக்கிய பயிரினைக் கொள்ளாமை உடைத்து.

பூ, பசித்தார்க்கு உடனே உணவளித்தல் அறன் என ஐந்தவித்தான் வதித்தானாயினும்,

1“செவிக்குண வில்லாத போழ்ந்து சிறிது
  வயிற்றுக்கு மீயப் படும்.’’

என்றார் ஆகலின், உடற்கு உறுதி செய்யும் உணவினும் உயிர்க்கு உறுதி செய்யும் கேள்வி பெரிதாய அறனாம் என நினைந்து, தும்பி பசித்திருப்பினும் இசைபாடும்வரை உணவு அளியாமல் உலக நடைபற்றிப் பின்னரே அளித்தல் உடைத்து.

அக்கோல்,

2“அறிவினு ளெல்லாந் தலையென்ப தீய
  செறுவார்க்குஞ் செய்யா விடல்.’’

என்றார் ஆகலின், ஐந்தவித்தான் தீய செய்யுமாறு சொல்லாமை பெறப்படுமாயினும் மருத்துவர் கேட்டவழித் தொடக்கத்துச் சிறு துன்புறுத்தினும் பின்னர்ப் பிணி தீர்த்துப் பெருநலமுறுத்தல் கருதி நஞ்சும் அளித்தலின், சொல்லாதனவும் செய்யும் உலகநடை உடைத்து.

இவ்வாற்றான் நால்வகைத் தூய்மையும் காரணமாக இடையறாது. ஒழுகலின், வான்யாறு நிலம் படர்ந்தன்ன நலம்படர் ஒழுக்கம் நால்வகையும் உடையான் ஆசிரியன் என்று உணரப்படும்.

அக்குடம் சிறாராகிய சிற்றினம் சேர்தலால், தூய்மை இன்மை காரணமாக நீரும் நெய்யும் பாலும் தயிருமென நல்வளம் படையாமையின் விதித்தன செய்தல் இன்று.


1திருக்குறள் 412.

2திருக்குறள் 203.