அக்கோல், அம்முப்பகுதியவாய பொருளைத் தன் நாவின் வரையான் அளந்து நிறுத்துக் காட்டலின், கருவி நூலுக்கு உவமம் ஆயிற்று. இனிப் பொறிவாயில் ஐந்து அவித்தான் பொய்தீர் ஒழுக்க நெறியின்கண் வழுவாது நிற்றலது வளர்ச்சிக்குத் தக அகத்து 1இருணிக்கியின்பம் பயத்தலின், கலையது வளர்ச்சிக்குத் தகப் புறத்து இருள் நீக்கி இன்பம் பயக்கும் திங்களன்ன கல்வி உடையான் ஆசிரியன். அக்குடம், நீர் முதலாயின தரும் ஒழுக்கமே அன்றி வித்தினை முளைக்கச் செய்யும் ஒழுக்கமும் இன்றாதலான் அம்முப்பயனுள் ஒன்றானும் செய்யாமல் விளையாடு கருவியாகிய பயனில் கழல் உடைத்து. ஆசிரியன் அல்லாதான், ஒழுக்கம் வேண்டாமையின், அதன் பொருட்டுக் கற்பனவாகிய நற்கல்வி உடையான் ஆகாமையான், அறம் பொருள் இன்பம் பயவாமல், ஆரவாரம் பயக்கும் பயனில் கல்வி உடையன். அப்பனை, பசி தீர்க்குமாயினும் பின்னர் அறிவழித்துத் தீங்கு செய்யும் கள் உடைத்து. அல்லாதான் இம்மையில் பொருள் பயக்குமாயினும் பின்னர்த் தீங்கு செய்து நிரயத்துள் வீழ்த்தற் பாலவாகிப், பிறர் பொருளைத் தன்வயமாக்கற்கு உபாயம் கூறும் சூது நூல் முதலாய அறத்தொடு படாப் பொருள் நூல் உடையன். அத்தெங்கு, தன் மருங்கு உற்றாரை உறுப்புக் குறைத்து ஊறு செயற்பாலதாகிய மட்டையினை உடைத்து. அல்லாதான், 2அறம்புகழ் கேண்மை பெருமையிந் நான்குஞ் சேராது நிக்கிப் 3பகைபாவ மச்சம் பழியென நான்கு மிகவாமற் சேர்த்துக், 4காணிற் குடிப்பழி யாக்கிக், கையுறிற் கால்குறைத்து, மாணின்மை செய்யுங்கால் இன்பம் தினைத்துணையும் இன்றி அச்சமே தந்து, நீள் நிரயத் துன்பம் பயத்தற்பாலதாகித் தனக்கு உரிமை
1திருக்குறள் 352 2நாலடி 82. 3திருக்குறள் 146 4நாலடி 84. பா- 6 |