திங்கள், நன்மை பயத்தலின் நிகழ்ந்ததாகிய தன் உருக்காட்டலே அன்றி, நிகழாததாகிய களங்கமும் காட்டலான் வாய்மை உடைத்து. ஞாயிறு, தீங்கு பயத்தலான், நிகழாததே அன்றி நிகழ்ந்ததாகிய தன் உருக்காட்டலும் இன்மையின் வாய்மை உடைத்து. நன்மை பயக்கும் உரைக்குத் திங்களும், தீங்கு பயவா உரைக்கு ஞாயிறும் உவமம் ஆதலின் ஆத்திரையன் பேராசிரியன் திங்களொடு ஞாயிறென இரண்டும் கூறினான் என்பது. அக்குடம், நிகழ்ந்ததாகிய கழற்காய் காட்டல் விளையாட்டிற்கு ஏதுவாகிச் சிறார்க்குத் தீங்கு உறுத்தலின் வாய்மை இன்று. அப்பனை, நிகழ்ந்ததாகிய கள்ளினைக் காட்டலும், மக்கள் சுவை இலதாயினும் அதனை உண்பார்க்குச் சுவையுடைத்து எனத் தோன்றலின் நிகழாததாகிய சுவை காட்டலும் தீங்கு பயத்தலின் வாய்மை இன்று. அத்தெங்கு, தான் முடம்பட்ட ஞான்றே நிகழ்ந்ததாகிய தன் முடத்தினை நீர் வார்த்துப் பேணுவார்க்குக் காட்டின், அவர் பின்னரும் சிரமமுறாமையின் அது நன்மை பயப்பதாகவும் அங்ஙனம் காட்டாமையின் வாய்மை இன்று. அப்பருத்தி, தின்னற்கு உரிய காய் வகையுள் ஒன்று எனக் காட்டினது சிறாரை விளையாட்டின் நீக்குதல் ஒன்றே அன்றிப் 1பருத்தி இலை மொட்டு இரண்டைப் பாலில் அரைத்து உண்ண, வருத்துகின்ற மேகமெல்லாம் மாறுமென நூல் கூறியவாறு நோய்சிலவும் தீர்தலின் நன்மை பயப்பதாகவும், அங்ஙனம் செய்யாமையின் வாய்மை இன்று. அல்லாதா நற்புலமை இன்மையின் வாய்மை இலக்கணம் உணரல் கூடாமையால் தீங்கு பயப்பினும் நிகழ்ந்ததே அன்றி நிகழாததும் கூறலும், நன்மை பயப்பினும் நிகழாததே அன்றி நிகழ்ந்ததும் கூறாமையும் உடையான் என்பது பெறப்பட்டது. இனி, நன்மை பயப்பின் பொய்யும் மெய்யாகியும் தீமை பயப்பின் மெய்யும் பொய்யாகியும் திரிதலானும் அவ்வேறுபாடு உணர்தற்கு,
1தேரையர் பதார்த்தகுண சிந்தாமணி |