பக்கம் எண் :

10தொல்காப்பியம்-உரைவளம்

உரை : மேற்சொல்லப்பட்ட நான்கு சொல்லுள்ளும் இயற்சொல் என்று கூறப்படுவன செந்தமிழ் நிலத்தார் வழங்கும் வழக்கத்திற்குப் பொருந்தித் தத்தம் பொருளின் வழுவாமல் நடக்குஞ் சொல், எ-று.

அவை : சோறு, கூழ், பால், 1பாளிதம் என்னுந் தொடக்கத்தன.

2செந்தமிழ் நிலம் என்பது வையையாற்றின் வடக்கு, மருதயாற்றின் தெற்கு, கருவூரின்கிழக்கு, மருவூரின் மேற்கு.

மற்று, இவற்றைத் தம்பொருள் வழாமை யிசைக்கும் என்பது என்னை? ஒழிந்தன தம் பொருள் வழுவுமோ வெனின், அற்றன்று; நாயை ஞமலி என்ப பூழி நாட்டார்; என்றக்கால் அச்சொல் எல்லா நாட்டாரும் 3பட்டாங்கு உணரார்; நாய் என்பதனை யாயின் எவ்வெத்திசை நாட்டாரும் உணர்ப என்பது.

சேனா.

இ-ள். அந்நான்கனுள் இயற்சொல் என்று சொல்லப்பட்ட சொற்றாம், செந்தமிழ் நிலத்து வழக்காதற்குப் பொருந்திக் கொடுந்தமிழ் நிலத்துந் தம்பொருள் வழுவாமல் உணர்த்தும் சொல்லாம், எ-று.

அவையாவன : நிலம், நீர், தீ, வளி, சோறு, கூழ், பால், தயிர், மக்கள், மா, தெங்கு, கமுகு என்னுந் தொடக்கத்தன.

செந்தமிழ் நிலமாவன வையை யாற்றின் வடக்கும் மருதயாற்றின் தெற்கும், கருவூரின் கிழக்கும், மருவூரின் மேற்குமாம்.

திரிபின்றி இயல்பாகிய சொல்லாகலின், ‘இயற்சொல்’ ஆயிற்று. கொடுந்தமிழ் நிலத்திற்கும் பொதுவாகலின் இயற்சொல்லாயிற்று எனினும் அமையும். 1நீர் என்பது ஆரியச்


1. பாளிதம்-தயிர்ச்சோறு.

2. இது சோழநாட்டெல்லை. இதுபற்றித் தெய்வச்சிலையார் உரைபார்க்க.

3. பட்டாங்கு-உள்ளவாறே. அதாவது சொல் காதில் பட்டவாறே.

1. நீர் என்னும் தமிழ்ச்சொல் ஆரியத்திற் சென்றது என்பதே பொருந்தும்.