பக்கம் எண் :

100தொல்காப்பியம்-உரைவளம்

என்னை ? அவ்விருபெயரொட்டுப் பண்புத் தொகை அறுவகைத் தொகைச் சூத்திரங்களுள் எடுத்தோத்து இன்றி ‘என்னகிளவியும் (எச்ச. 20) என்ற இலேசினால் கொண்ட தாகலின். ஆயின், “வண்ணத்தின் வடிவின்” (எச்ச. 20) என்பதன்கண் இருபெயரொட்டாய் ஐம்பால் அறியாத வடிவினையும் எடுத்தோதினாரால் எனின், வடிவு முதலியவற்றிற்கும் அறுவகைத் திரிபினுள் ஏற்பன கொணர்ந்து முடித்தலின், குன்றலும் தொகையாம் என்று உணர்க. ‘என்ன கிளவியும்’ (எச்ச. 20) என்றதனால் கொள்வன வருமொழி இன்றி நிலைமொழியும் பொருள் உணர்த்தி நிற்கும் என்பது ஆண்டுக் கூறுதும்.

அன்றியும், ‘செய்தான் பொருள்’, ‘இருந்தான் குன்றத்து என வழங்குவன, ஒட்டி ஒரு சொல் ஆகாமையும், செய்யுட்கண்’

‘கழூஉ விளங்காரம் கவைஇய மார்பே’       (புறம். 19)

எனவும்,

‘மாற்றுமைக் கொண்ட வழி       (கலி. 12 : 19)

எனவும் இறுதிக்கண் இரண்டாவது தொக்கன,

‘முயங்கினெ னல்லனோ       (புறம். 19)

எனவும், ‘போற்றாய்’ எனவும் வரும் முடிக்கும் சொற்களோடு ஒட்டி ஒருசொல் ஆகாமையும்,

‘தோன்றல் மறந்தோர் துறைகெழு நாட்டே’

எனவும்,

சிறுகுரல் நெய்தல் எம் பெருங்கழி நாட்டே’ (அகம் 120) எனவும் இறுதிக்கண் ஏழாவது தொக்கன; தோன்றும் எனவும் சேர்ந்தனை செலினே’ எனவும் வரும் முடிக்குஞ் சொற்களோடு ஒட்டி ஒருசொல் ஆகாமையும் உணர்க. இன்னும்,

‘வல்லே மறைவல் ஓம்புமதி எம்மே’

என இடைக்கண் தொக்கனவும்,

“பொன்னோடைப் புகரணிநுதல்
துன்னருந்திறல் கமழ் கடாத்து