பக்கம் எண் :

தொகை மொழித் தொடர் வகை சூ. 1699

பொருள்தரும் வேறோர்சொல் தொக்க தொகை, என்று அவ் ஆறு என்ப-என்று சொல்லப்பட்ட அவ்வாறும் என்று சொல்லுவர் ஆசிரியர், தொகைமொழி நிலையே - தொகைச் சொல்லினது நிலைமையை, எ-று.

‘ஐம்பாலறியும் பண்புதொகு மொழியும்’       (தொல். எழு. குற். 77)

எனவும்,

“செய்யும் செய்த என்னும் கிளவியின்
மெய்யொருங் கியலும் தொழில் தொகு மொழியும்”       (௸)

எனவும்,

“உருபுதொக வருதலும்”       (வேற். மயங். 21)

எனவும்,

“மெய்யுருபு தொகாஅ இறுதியான”       (வேற். ம. 22)

எனவும்,

“பண்புதொக வரூஉம் கிளவி யானும்”       (எச்ச. 22)

எனவும்,

“உம்மை தொக்க பெயர்வயி னானும்”       (எச்ச. 22)

எனவும்,

“வேற்றுமை தொக்க பெயர் வயி னானும்”       (எச்ச. 22)

எனவும்,

உம்மையெஞ்சிய இருபெயர்த் தொகை மொழி       (உயிர் ம. 21)

எனவும்,

ஆசிரியர் தொக்கே நிற்கும் எனச் சூத்திரம் செய்தலின், வேற்றுமையுருபும் உவமவுருபும் உம்மும் வினைச் சொல்லீறும் பண்பு உணர்த்தும் ஈறும் இத்தொகைச் சொற்கள் அல்லாததோர் சொல்லும் தொக்கு நிற்றலின், தொகைச்சொல் என்பதே அவர் கருத்தாயிற்று. ஆயின், கேழற்பன்றி, வேழக்கரும்பு என்பனவற்றிற்குத் தொக்கன இன்மையின் தொகைச்சொல் ஆமாறு என்னையெனின், அவற்றிற்கும் ஒன்றை யொன்று விசேடித்து நிற்கின்ற தன்மையை உணர்த்துதற்கு வரும் ‘ஆகிய’ என்னும் வாசகம் தொக்கு நின்றது என்றே கோடும். அன்றித் தன்கண் தொக்கன இன்றி அங்ஙனம் வாசகம் தொக்கு நின்றது தொகை என்றற்குச் சாலாமையின், அதனையொட்டி ஒரு சொல்லாய் நின்று தம் பொருள் உணர்த்தும் என்று கொண்டு ஏனையவற்றையும் அவ்வாறே கோடும் எனின், எடுத்தோத்தினும் இலேசு சிறத்தல் யாண்டும் இன்மையின் அது பொருந்தாது.