பக்கம் எண் :

98தொல்காப்பியம்-உரைவளம்

வேற்றுமைத் தொகையென்பது வேற்றுமைப் பொருளையுடைய தொகை யென்றானும் வேற்றுமைப் பொருள் தொக்க தொகையென்றானும் விரியும். உவமத்தொகை, உம்மைத்தொகை, அன்மொழித் தொகை என்பனவும் அவ்வாறு விரியும். அன்மொழியாவது தொக்க சொல் அல்லாத மொழி, வினைத்தொகை பண்புத்தொகை என்பன, வினையினது தொகை பண்பினது தொகையென விரியும். வினை பண்பு என்றது பண்பினது தொகையென விரியும். வினை பண்பு என்றது அவற்றை யுணர்த்தும் சொல்லை ஒரு சொல்லாம் தொகையின்மையின் பிறிதோர் சொல்லொடு தொகுதல் பெறப்படும்.

இச்சூத்திரத்தால் தொகைச்சொல் இனைத்தென வரையறுத்தவாறு.

தெய்

தொகைச் சொல்லாமாறு உணர்த்துதல் நுதலிற்று.

இ-ள் : வேற்றுமைப் பொருள் குறித்த தொகையும் உவமப்பொருள் குறித்த தொகையும் வினைத் தொழில் குறித்த தொகையும் பண்புகுறித்த தொகையும், உம்மைத் தொகை செய்யும் தொகையும், அல் பொருள் குறித்த தொகையும் என அறுவகைப்படும் தொகைச் சொல்லது நிலைமை, எ-று.

தொகைச் சொல்லாவது பொருளுணர்த்துஞ் சொல்லாயினும் தொழிலுணர்த்துஞ் சொல்லாயினும் இரண்டு சொல் விட்டிசைத்து நில்லாது ஒட்டி நிற்பது. இஃது ஒட்டுப்பெயர் என்னும் குறியும் பெறும். உதாரணம் வருகின்ற சூத்திரத்துட்காட்டுதும்.

நச்

இது, தொகைச் சொற்களுக்குப் பெயரும் முறையும் தொகையும் கூறுகின்றது.

இ-ள் : வேற்றுமைத் தொகையே - வேற்றுமையுருபுகள் தொக்க தொகை, உவமத் தொகையை - உவமவுருபுகள் தொக்க தொகை, வினையின் தொகையே - வினைச்சொல் ஈறுகள் தொக்க தொகை, பண்பின் தொகையே - பண்பு உணர்த்தும் ஈறுகள் தொக்க தொகை, உம்மைத் தொகையே-உம் என்னும் இடைச்சொல் தொக்க தொகை, அன்மொழித் தொகை - இத்தொகைச் சொற்களின் இறுதிக்கண் வந்து