தொகை மொழித் தொடர் வகை சூ. 16 | 101 |
எயிறுபடை யாக எயிற்கத விடாஅக் கயிறுபிணிக் கொண்ட கவிழ்மணி மருங்கிற் பெருங்கை யானை” (புறம் 3) என அடுக்கி வருவனவும் ஒட்டி ஒருசொல் ஆகாமையும் உணர்க. ‘அதுவென் வேற்றுமை (வே. ம. 11) என்னும் சூத்திரத்து ‘அதுவென் உருபு கெட’ என்றதனால் ‘அது என் உருபு நின்றால் அல்லது கெடுதல் இன்மையின், அது நின்று கெட்டது என்னும் பொருள் தரல் ஆண்டுக் கூறிப் போந்தாம். அதனால் ஈண்டுச் சேனாவரையர் கூறிய பொருட்டு விடை யின்மையுணர்க. இவற்றுள் வினைத் தொகையும் பண்பின் தொகையும் சிறிது தொக்குத் தொகையாதலும், ஏனைய முழுவதூஉம் தொக்குத் தொகையாதலும் உணர்க. வெள் இது தொகைச் சொற்களின் பெயரும் முறையும் தொகையும் கூறுகின்றது. இ-ள் : வேற்றுமைத் தொகை, உவமத் தொகை, வினைத்தொகை, பண்புத் தொகை, உம்மைத் தொகை, அன்மொழித் தொகை எனத் தொகைச்சொற்கள் ஆறு என்பர் ஆசிரியர், எ-று. வேற்றுமை யுருபு முதலாயின இடையே மறைத்து நிற்றலேயன்றி இரண்டு முதலிய சொற்கள் ஒட்டி ஒரு சொல்லாதலும் தொகையிலக்கணமாம் என்னும் (சேனாவரையர்) இக்கருத்து “எல்லாத் தொகையும் ஒருசொல் நடைய” (எச்ச. 24) எனவரும் சூத்திரத்தில் இடம் பெற்றுள்ளமை இங்கு நினைக்கத் தகுவதாகும். ஆதி தொகை மொழிகள் ; வேற்றுமைத் தொகை உவமத்தொகை வினைத்தொகை பண்புத் தொகை உம்மைத் தொகை அன்மொழித் தொகையென அவை ஆறு வகைப்படும். |