பக்கம் எண் :

102தொல்காப்பியம்-உரைவளம்

தொகு-தொடர் என்றும் மறை என்றும் இருபொருள் தரும் இங்கு மறைதல் என்னும் பொருளே தருகின்றன.

சிவ

(தொகை என்னும் பெயர்க்காரணம்)

வேற்றுமைத் தொகை முதலிய ஆறு தொகைகளும் தொகை யெனப் பெயர் பெற்றமைக்கு இரு வேறு காரணங்கள் கூறப்படுகின்றன.

1) விரிந்து நிற்க வேண்டிய உருபுகள் தொக்கி (மறைந்து) நிற்றலின் தொகை யெனப் பெயர் பெற்றன.

 விரி.தொகை.
உ-ம்:சோற்றையுண்டான்சோறுண்டான்-வேற்றுமைத்தொகை
 மதிபோலும்முகம்மதிமுகம்-உவமத்தொகை
 கொன்றயானைகொல்யானை-வினைத்தொகை
 கருமையாகியகுழல்கருங்குழல்-பண்புத்தொகை
 கபிலனும்பரணனும்கபிலபரணர்-உம்மைத்தொகை
 பொன்னாலாகியதொடியுடையாள்பொற்றொடி-அன்மொழித்தொகை.

2) வேற்றுமை உவமை முதலிய பொருள்களில் இரண்டு அல்லது பலசொற்கள் ஒட்டி ஒருசொல்போல நிற்றலின் தொகை எனப்பெயர் பெற்றன. தொகை என்பது பிளவுபடாது ஒட்டி நிற்றலைக் குறிக்கும்.

உ-ம் : சோறுண்டான் முதல் பொற்றொடி வரையுள்ளன போல்வன. முதற்கருத்தினர் இளம்பூரணரும் நச்சினார்க்கினியரும் இரண்டாங் கருத்தினர் சேனாவரையரும் தெய்வச்சிலையாரும்.

முதற் கருத்தைச் சேனாவரையர் மறுக்குமாறு :

1) உருபு தொகுதல், இரண்டு (முதலிய) சொற்கள் ஒட்டி ஒருசொல் போலாதல் என்னும் இரண்டு கருத்துகளையும் ஏற்கலாம். ஆனால் முதற்கருத்தை ஏற்பதற்கு ஒரு தடங்கல் உண்டு.