பக்கம் எண் :

தொகை மொழித் தொடர் வகை சூ. 16105

இனிச் சேனா வரையர்க்குப் பிற்காலத்தவரான நச்சினார்க்கினியர் கருத்தைக் காணலாம்.

உருபு தொகுவதே தொகை என்னும் கருத்தினர் நச்சினார்க்கினியர்.

தொழில் தொகு மொழியும்       (குற். புண. 77)

‘உருபு தொக வருதலும்’       ( ” )

‘பண்பு தொக வரூஉம் கிளவியானும்’       (எச்ச. 22)

‘உம்மை தொக்க பெயர்வயி னானும்’       ( ” )

வேற்றுமை தொக்க பெயர்வயினானும்’       ( ” )

‘உம்மை யெஞ்சிய இருபெயர்த் தொகைமொழி’       (உயிர்ம. 21)

என ஆசிரியர் உருபு தொகுவதே தொகை என்றார் எனக்கூறுவர். இரு பெயரொட்டுப் பண்புத் தொகைக்கு உருபு இன்மையால் வேழக்கரும்பு என்பது உருபு தொக்கது என்னலாமோ எனின், இரு பெயரும் ஒன்றையொன்று விசேடித்த நிலையை விளக்கும் ‘ஆகிய’ என்பது அங்குத் தொக்கது என்னல் வேண்டும்.

தனக்கெனத் தனியுருபு இல்லாத இருபெயரொட்டானது ஒட்டி ஒரு சொல்லாய் நிற்றலின் அதன் இலக்கணமே தமக்கெனவுருபுகளுடைய பிறதொகைகட்கும் இலக்கணமாம்; அதாவது உருபு தொகுதல் காரணம் இன்றி ஒட்டி ஒரு சொல்லாய் நிற்றலே தொகையிலக்கணம் என்னலாமே என்பது ஒருவாதம். வேற்றுமைத் தொகை முதலிய ஐந்தும் தமக்கென ஒருபுடையன, அன்றியும் அவ்வைந்தையும் ஆசிரியர் விதந்து கூறினார். இருபெயரொட்டுப் பண்புத்தொகையை “வண்ணத்தின் வடிவில்” (எச்ச. 15) என்பதில் என்ன கிளவியும் என இலேசினால் தழுவிக்கொண்டார். அதனால் எடுத்து ஓதாது இலேசினால் தழுவிக் கொள்வதற்குச் சிறப்புக் கொடுத்துக் கூறல் கூடாது. அதனால், சிறப்பாக உருபுகளையுடைய தொகைகளைப் பற்றித் ‘தொகுவது தொகை’ எனும் கொள்கையே வலியுறும் என்பது நச்சினார்க்கினியர் கொள்கை.