வேற்றுமைத் தொகை சூ. 17 | 109 |
முற்பதம் எண் பிற்பதம் தத்தி தார்த்த முடித்தும் எழூஉம் பற்பல ஏகவற்பாவி அநேக வற்பாவி என்றே. இ. வி. 336. வேற்றுமைத் தொகையே வேற்றுமை யியல. முத்து. ஓ. 95 இரண்டு முதலா இடைஆறு உருபும் வெளிப்படல் இல்லது வேற்றுமைத் தொகையே. இளம் இச்சூத்திரம் என்னுதலிற்றோ வெனின், நிறுத்தமுறையானே வேற்றுமைத் தொகையது இலக்கணம் கூறுதல் நுதலிற்று. உரை : வேற்றுமையுருபு தொக்கு நின்ற தொகைச் சொற்கள் அவ்வுருபு இருந்தாங்கே பொருள்படும், எ-று. அவையாவன : நிலங்கடந்தான், தாய்மூவர், கருப்புவேலி, வரைவீழருவி, யானைக்கோடு, குன்றக்கூகை என இவை. இவற்றையும் அவ்வுருபு விரிந்தாங்கே பொருள்படுமாறு அறிந்து கொள்க. அத்தொகுதிக்கண் உருபுகள் பலவகையும் புலப்படாதே நின்றன என்ப 1ஒரு சாரார்; 2 ஒரு சாரர் இல்லை யென்ப. சேனா இ-ள் : வேற்றுமைத்தொகை அவ்வேற்றுமையுருபு தொடர்ப்பொருள் உணர்த்தியாங்கு உணர்த்தும், எ-று.
1. சேனாவரையர். உருபு புலப்படாது உருபின் பொருள் படவரும் என்பர். 2. நச்சினார்க்கினியர், உருபு விரிந்திருப்பது மறைந்து வருவம் என்பர். |