பக்கம் எண் :

வேற்றுமைத் தொகை சூ. 17111

அவை தொகுமாறு:- படையைப் பிடித்தகை, குழையையுடையகாது, குதிரையாற் பூட்டப்பட்டதேர், தாயொடு கூடிய மூவர், கடி சூத்திரத்திற்கு வைத்த பொன், வரையினின்றும் விழா நின்ற அருவி, யானையது கோடு, குன்றத்துக்கண் வாழா நின்ற கூகை என்பன, படைக்கை, குழைக்காது, குதிரைத்தேர், தாய் மூவர், கடி சூத்திரப் பொன், வரையருவி, யானைக்கோடு, குன்றக்கூகை யெனத்தொகும்.

நிலத்தைக் கடந்தான், வாளால் வெட்டினான் கொலைக் குடம்பட்டான், வரையினின்றும் பாய்ந்தான், குன்றத்துக் கண் இருந்தான் என்றவழி, இறுதி நின்றசொல் தொழில் உணர்த்தாது அது செய்தார்க்குப் 1பெயராய் வந்துழி, நிலங்கடந்தான், வாள் வெட்டினான், கொலையுடம் பட்டான், வரை பாய்ந்தான், குன்றத்திருந்தான் என இரண்டு பெயரும் ஒட்டி ஒரு சொல்லாகி வரும். கள்ளையுண்டல், வாளால் வெட்டல், கொலைக்குடம்படுதல், வரையினின்றும் பாய்தல், மாடத்துக்கண் இருத்தல் என்பன, கள்ளுண்டல், வாள் வெட்டல், கொலையுடம் படுதல், வரைபாய்தல், மாடத்திருத்தல் எனத்தொகும்.

அஃதேல் இவ்வாறு வருவன உருபு தொகைஎன அடங்காவோ எனின், ஆண்டு அவ்வேற்றுமைகட்கு ஓதிய வாய்பாட்டால் தொழிலோடும் பெயரோடும் முடிவழி, உருபு மாத்திரம் தொக்கு இரண்டு சொல்லாகி நிற்கும்; ஈண்டு ஒரு சொல்லாகி வரும். ஆறாவதன்கண் வரும் தொகை 2உருபு தொகையும் பொருட்டொகையுமென வேறுபாடின்றால் எனின், ஆண்டும்


1. பெயராய் - வினையாலணையும் பெயராய்

2. உருபுத்தொகை - உருபு மறைந்து இரண்டு சொல் நிலையில் இருப்பது. பொருள் தொகை-உருபு மறைந்தது என்றாலும் ஒட்டி ஒரு சொல் நிலையில் இருப்பது. மரக்கோடு மரத்தின் கோடு என்பன ஆறாம் வேற்றுமைத் தொகையாயினும் மரக்கோடு ஒட்டி ஒரு சொல்லாகும். மரத்தின் கோடு என்பது இன்சாரியை யிடைவந்து பிரித்த இருசொல்லாகும். அதனால் முன்னது பொருள் தொகை; பின்னது உருபுத் தொகை.