வேற்றுமைத் தொகை சூ. 17 | 115 |
நச் இது முறையானே வேற்றுமைத் தொகை கூறுகின்றது. இ-ள் : அவற்றுள்-முற்கூறிய ஆறனுள் வேற்றுமைத்தொகை-வேற்றுமையுருபுகள் தொக்க தொகைச் சொற்கள், வேற்றுமை இயல-அவ்வுருபுகள் தொக்கன வேனும் தொகாது நின்றாற்போலப் பொருள் உணர்த்தும் இயல்பின, எ-று. 1உ-ம் : | ‘பகடு நடந்தகூழ் பல்லாரோ டுண்க’ (நாலடி. 2) | | ‘ஒருகுழை ஒருவன் போல்’ (கலி. 26) |
எனவும், ‘வல்லவர், செதுமொழி சீத்த செவி’ (கலி. 68.) எனவும், ‘பருத்தி வேலிக்கருப்பை பார்க்கும்’ (புறம். 324.) எனவும், ‘வரையிழி மயிலின் ஒல்குவள்’ எனவும், ‘நின் மைந்துடை மார்பிற் சுணங்கு’ (கலி. 18.) எனவும், ‘மன்ற வேம்பின் ஒண்குழை மலைந்து’ (புறம். 79.) எனவும் வரும். வழக்கு உதாரணம் வேற்றுமை மயங்கியலிற் காட்டினாம். சாத்தனொடு வந்தான், சாத்தற்குக் கொடுத்தான் என்றாற்போல்வன தொக்கால் தொகைப் பொருள் உணர்த்தாது எழுவாயும் பயனிலையுமாய் நிற்றலின், இந்நிகரனதொகா என்றுணர்க. வெள் இது வேற்றுமைத் தொகையாமாறு கூறுகின்றது. இ-ள் : வேற்றுமையுருபுகள் தொக்க தொகைச் சொல்லாவன அவ்வுருபுகள் விரிந்து நின்று பொருளுணர்த்தினாற்போலும் இயல்பினையுடையன, எ-று.
1. பொருள். |