எனவே அவ்வியல் பில்லன வற்றின்கண் அவ்வுருபுகள் தொகா என்பதாம்.............. இரண்டாம் வேற்றுமைத் தொகை முதலாக வேற்றுமைத்தொகை ஆறு வகைப்படும். உ-ம் : | நிலங்கடந்தான், குழைக்காத எனவும், | | தாய்மூவர், பொற்குடம் எனவும், கருப்பு வேலி, தாலிப்பொன் எனவும் வரைபாய்தல், கருவூர்க் கிழக்கு எனவும், மன்றப் பெண்ணை, மாரிமா எனவும் வரும். |
இவை முறையே, நிலத்தைக் கடந்தான், குழையையுடையகாது’ தாயொடு மூவர், பொன்னான் இயன்றகுடம், கரும்பிற்கு வேலி, தாலிக்குப் பொன், வரையினின்றும் பாய்தல், கருவூரின் கிழக்கு, மன்றத்தின் கண் நிற்கும் பெண்ணை (பனை), மாரிக்கண் உளதாம்மா என உருபுகள் விரிந்து நின்றால் தரும் பொருளைத் தொகையாய் நின்ற நிலையிலும் இனிது விளக்கியவாறு காண்க. ஆதி குறிப்பு : “வேற்றுமையுருபு வெளிப்படை இல்லாத தொடர்மொழி வேற்றுமைத் தொகையா கும்மே” என்பது தெளிவும் இலகுவும் ஆகும். சிவ சுப்பிரமணியசாஸ்திரியார் இச்சூத்திரவுரைக் குறிப்பில் தெய்வச்சிலையார் நிலத்தைக் கடந்தான் என்பது அப்பொருளைத் தருதலன்றி நிலத்தைக் கடந்தவனாகிய ஒருவன் என்று (வினையாலணையும்) பெயராகவரின் நிலத்தைக் கடந்தான் என விரிந்து வாராமல் நிலங்கடந்தான் எனத்தொக்கே (ஒட்டி ஒரு சொல்லாய்) வரல் வேண்டும் என்று கூறுவதால், சேனாவரையர், ‘பெயரினாகிய தொகையுமாருளவே’ (சொல். ) என்னும் சூத்திரவுரையில், “நிலங்கடந்தான் மாக்கொணர்ந்தான் எனப் பெயரொடு வினைவந்து தொக்க வினையினாகிய தொகையுமுள என்பதாம்” என்று கூறும் வாக்கியம் பொருந்துமா?” என வினவியுள்ளார். |