பக்கம் எண் :

வேற்றுமைத் தொகை சூ. 17117

பொருந்தும், நிலங்கடந்தான் என்பதில் கடந்தான் என்பது வினை முற்றாக இருப்பின் இரண்டாம் வேற்றுமைத் தொகை என்பதில் தெய்வச்சிலையார்க்கு மாறுபாடில்லை. அது வினையாலணையும் பெயராக வரும் போது தான் நிலத்தைக் கடந்தான் என வரலாகாது என்பதே அவர்கருத்து.

உவமத் தொகை

408 :உவமத் தொகையே யுவம வியல்       (18)
  
 (உவமத் தொகையே உவம இயல).

ஆ. மொ. இல.

Simile-Compound is in the nature of a simile.

பி. இ. நூ.

நன். 366

உவம வுருபிலது உவமத் தொகையே.

இ. வி. 337

உவமத் தொகையே உவம இயல.

முத்து. ஒ. 98

உவம உருபிலது உவமத் தொகையே.

இளம்

இச்சூத்திரம் என்னுதலிற்றோ வெனின், நிறுத்த முறையானே உவமத்தொகை உணர்த்துதல் நுதலிற்று.

உரை : உவமத் தொகைக்கண் அவ்வுருபு தொக்கு நின்றாலும் அவ்வுருபு விரிந்தாங்கே பொருள்படும், எ-று.

உவமம் தொகுங்கால் வினை, பயன், மெய், உரு என்ற நான்கும் பற்றித் தொகும்.