1வினையுவமம் : புலிப்பாய்த்துள் என்பது | பயனுவமம் : மழை வண்கை என்பது | மெய்யுவமம் : துடி நடு என்பது | உருவுவமம் : முத்த முறுவல் என்பது |
‘முத்துப்போலும் முறுவல்’ என்று உவமவுருபு விரிந்து நின்றாங்கே அவ்வுருபு தொக்க நிலைமைக் கண்ணும் பொருள் ஒக்கும் என்பது. மற்று இவ்வுவமத்தொகை யென்று காட்டின வெல்லாம் வேற்றுமையுருபு பற்றியன்றிவாரா; என்னை? ‘துடிநடு’ என்ற விடத்துத் ‘துடியை ஒக்கும் நடு’ ‘துடிநடு’ என்று இரண்டனுருபு பற்றி வருமாகலின், உவமத்தொகை என்பது என்னையெனின் அதற்கு ஒருசாரார் சொல்லுவது :- 2துடிநடு என்புழி உவமவுருபும் வேற்றுமையுருபும் என இரண்டும் தொக்க வேனும், ‘துடி போலும் நடு’ என தொகைக்கு உவமப் பொருளே சிறப்புடைத்தாகலின் அது
1 புலிப்பாய்த்துள் - புலிபோலப்பாயும் பாய்ச்சல் மழைவண்கை - மழைபோல் கொடுக்கும் வண்கை துடிநடு - துடியின் நடுப்பகுதிபோல் மெலிந்த இடை (நடு-இடை) 2 துடிநடு-இதில் துடியைப்போலும் இடை என்னும் பொருளில் ஐகார வேற்றுமையுருபும் போலும் என்பதும் மறைந்துள்ளன. ஐகாரம் நோக்கி வேற்றுமைத்தொகை என்னலாமா? வீடுகட்டினான் என்பதை வீட்டைக்கட்டினான் என விரித்தால் ஐகாரம் கட்டினான் என்பதைக் கொண்டு முடிகிறது. துடிநடு என்பதைத் துடியைப் போலும் நடு என விரித்தால் ஐகாரம் நடு என்பதைக் கொண்டு முடியவில்லை போலும் என்பதைக் கொண்டே முடிகின்றது. அதனால் ‘துடிநடு’ என்பதில் உவமவுருபுக்கே சிறப்புண்டு. அதனால் உவமத்தொகை என்பதே நன்று. பிற உரையாசிரியர் கருத்தும் காண்க. இக்கருத்துமட்டும் போதாது என்று மெய்யுரை........கேட்டுணர்க என்றார். |