தொகையென்பது. ஐகாரவுருபு அவ்வுவம வுருபினை நோக்கி வந்தது என்ப; என்னை? 3துடியை நடுவாகக் கொள்ளாதாகலின் என்பது இனி, அதற்கு மெய்யுரை வல்லோர்வாய்க் கேட்டுணர்க. சேனா இ-ள் : உவமத் தொகை உருமவுருபு தொடர்ப்பொருள் போலப் பொருளுணத்தும், எ-று. எனவே, புலியன்ன சாத்தன், மயிலன்ன மாதர் என்னும் பொருட்கட் புலிச்சாத்தன் மயின் மாதர் என அப்பொருள் விளக்கும் ஆற்றல் இல்லன தொகா; ஆற்றலுடையனவே தொகும் என்பதாம். உ-ம் : புலிப்பாய்த்துள், மழைவண்கை, துடிநடுவு, பொன்மேனி என்பன. புலிப்பாய்த்துள் அன்ன பாய்த்துள், மழையன்ன வண்கை, துடியன்ன நடுவு, பொன் அன்னமேனி எனத் தம் விரிப்பொருளுணர்த்தியவாறு கண்டு கொள்க. அஃதேல் புலிப்பாய்த்துளை ஒக்கும் பாய்த்துள், மழையை ஒக்கும் வண்கை என விரிதலின் அவையெல்லாம் வேற்றுமைத்தொகையெனப்படும். அதனான் உவமத்தொகையென ஒன்றில்லை யெனின், அற்றன்று; சொல்லுவார்க்கு அது கருத்தாயின் வேற்றுமைத் தொகையுமாம்; அக்கருத்தானன்றிப் ‘புலியன்ன பாய்த்துள்’ ‘பொன் மானு மேனி’ என வேற்றுமையோடு இயைபில்லா உவமவுருபு தொடர்ப் பொருட்கட் டொக்கவழி உவமத் தொகையாவ தல்லது வேற்றுமைத் தொகை ஆண்டின்மையின்
3. துடியை.......................என்பது துடியை இடையாக உலகம் கொள்ளாதாகலின். இத்தொடர், துடியை இடைகொண்டதன்று ஆகலின் என்னும் பொருளில் அமைந்தது. |