பக்கம் எண் :

120தொல்காப்பியம்-உரைவளம்

வேற்றுமைத் தொகையாமாறில்லை யென்க. *உவம வுருபு ஒப்பில்வழியாற் பொருள் செய்யும் இடைச்சொல் லாகலான் வினையும் வினைக்குறிப்பும் பற்றிவரும். அவைபற்றி 1என்போற்பெருவிதுப் புறுக நின்னை யின்னாது உற்ற அறனில் கூற்றே’ (புறம் 255) என்புழிப்போல என்பது, 2குறிப்பு வினையெச்ச

*‘உவம வுருபு.............................ஏற்புடைமை யறிக’ விளக்கம் : போல அன்ன என்னும் உவம வுருபுகள் போல அன்ன எனக்குறிப்பு வினையெச்சமாகவும் போல்வார் அன்னோர் எனக் குறிப்புப் பெயராகவும் வரும். அப்போது அவை இரண்டாம் வேற்றுமை யுருபால் முடிக்கப்படும் ‘எம் போல’ என்பது எம்மைப் போல’ என்றும் ‘எம் மன்னோர்’ என்பது ‘எம்மை அன்னோர்’ என்றும் விரிக்கப்படும். இதன் காரணமாகவும் உவமத்தொகை இரண்டாம் வேற்றுமைத் தொகையாகவும் விரித்தற்கு ஏற்கும்.

“சேனாவரையர் கூறிய அமைதி மூன்றனுள் முதல் அமைதி சிறப்புடைத்தன்று. இரண்டாம் வேற்றுமையுருபை விரிக்காது உவமவுருபை மட்டுமே விரிக்கின் உவமத்தொகையேயாகும் என்பது சொல்ல வேண்டுவதின்று. ஈண்டு எடுத்துக் கொண்டது உவம வுருபும் இரண்டனுருபும் ஒருங்கு விரிதற்கேற்ற சொற்கள் தொக்குழி எப்பெயர் பெறும் என்பதே. ஆதலின் இரண்டாவது அமைதியும் அத்துணை அமைவுடைத்தன்று. மூன்றாவதாகக் கூறும் அமைதியே சிறப்பாகவுள்ளது”. - கு. சுந்தர மூர்த்தி.

1. பொருள் : நினக்குச் சாதலைச்செய்த அறமில்லாத எமன் என்னைப் போலப் பெருந்துன்பம் அடைக.

2. ‘குறிப்பு’ என்பது பற்றிய கணேசய்யர் கருத்தை உரைகளின் முடிவில் காண்க.