பக்கம் எண் :

உவமத் தொகை சூ. 18121

மாய் நிற்றலானும், 3நும்மனோரு மற்றினையராயின், எம்மனோ ரிவட் பிறவலர் மாதோ’ (புறம். 210) என்புழி ‘அன்னோர்’ என்பது இடைச்சொல் முதனிலையாகப் பிறந்தகுறிப்புப் பெயராகலானும், என்னைப்போல, நும்மையன்னோர், எம்மையன்னோர் என இரண்டாவது விரித்தற்கு ஏற்புடைமையறிக.

தெய்

உவமைத் தொகையாமாறு உணர்த்துதல் நுதலிற்று.

இ-ள் : உவம இயல்புடையன உவமத் தொகையாம், எ-று.

உவமையாவது தொழிலானதால் பயனான் ஆதல், வடிவினான் ஆதல், வண்ணத்தினான் ஆதல் ‘இது போலும் இது’ என ஒன்றோடொன்று உவமை கூற வருவது. அவ்வுவமையும் உவமிக்கப்படும் பொருளும் விட்டி சைத்து நில்லாது 4செறிய நிற்பது உவமைத் தொகையாம் என்றவாறு.

புலியன்ன பாய்த்துள், மழையன்ன வண்கை, துடியன்ன இடை, பொன்னன்ன மேனி என்பன, புலிப்பாய்த்துள், மழை வண்கை, துடியிடை, பொன்மேனி எனவரும் பிறவு மன்ன.

இவை விரியுங் காலத்து புலியை யொக்கும் பாய்த்துள், மழையை யொக்கும் வண்கை எனவும் விரிதலானும், ‘காப்பின் ஒப்பின்’ என இரண்டாவதன்கண் ஒப்பாதலானும் உவமைத்தொகை என்ப தொன்றில்லை; இவையும் வேற்றுமைத்தொகையாம் எனின், ஒக்கும். மழையன்ன வண்கை யென்றவழி இரண்டாம் உருபு விரியாமலும் தான் நின்று உவமிக்கப்படும் பொருளைக் காட்டுதலின் இவ்வாறு வருஞ்சொற்களை நோக்கி


3. பொருள் : நும்போன்றோரும் இத்தன்மையராயின் எம்போன்றோரும் இவ்வுலகில் பிறவார்.

4. செறிய நிற்பது - ஒட்டி ஒரு சொல்லாய் நிற்பது.