ஒப்பில் வழியால் பொருள் செய்யும் அவ்வுவமவுருபுகள் தாம் முதல் நிலையாய் நின்றும், பெயரெச்சங்கட்கும் முற்றிற்கும் வினையெச்சங்கட்கும் உரிய ஈறுகளை ஏற்ற சொல்லாயே நின்று, அவற்றிற்கு ஏற்ற முடிவு கொள்ளும் என்று உணர்க. ஆசிரியர் செய்யுள் இன்பம் நோக்கி அவ்வுவம உருபுகளை பெரும்பான்மை செயவென் எச்ச வாய்பாட்டானும் சிறுபான்மை செய்த என்னும் பெயரெச்ச வாய்பாட்டானும் ஓதினாரேனும் ஏனை வாய்பாடுகளும் அம் முதல் நிலைக்கண் விரியுமாறு ஆண்டு உணர்க. ஆசிரியர் செய்யுள் இன்பம் நோக்கி அவ்வுவம உருபுகளை பெரும்பான்மை செயவென் எச்ச வாய்பாட்டானும் சிறுபான்மை செய்த என்னும் பெயரெச்ச வாய்பாட்டானும் ஓதினாரேனும் ஏனை வாய்பாடுகளும் அம் முதல் நிலைக்கண் விரியுமாறு ஆண்டு உணர்க. புலிப்பாய்த்துள், மழை வண்கை, துடிநடுவு, பொன்மேனி என வினை, பயன், மெய், உருவின்கண் வந்த இவ்வுவமத்தொகைகள் விரிந்துழிப் ‘போலும்’ என்னும் உருபானும், ‘அன்ன’ என்னும் உருபானும் பிற உருபானும் விரிந்து, செய்யும், செய்த என்னும் பெயரெச்சக் குறிப்பு ஆமாறு உணர்க. அவற்றுள் ‘போலும்’ என்பது செய்யும் என்னும் குறிப்பு முற்று ஆமாறும் உணர்க. உணர்த்துங்கால், ‘புலி போலும் பாய்த்துள், புலி அன்ன பாய்த்துள் என விரித்தால் உணராதானை, இதன் பொருள், ‘புலியினது பாய்த்துளை ஒத்த பாய்த்துள்’ என்றவாறு காண் என ஒப்பு என்னும் வழக்கு வாசகத்தால் செய்யும், செய்த என்னும் பெயரெச்சக்குறிப்பு வாசகம் தோன்ற உணர்த்துக. முறிமேனி முத்தம் முறுவல் வெறிநாற்றம் வேலுண்கண் வேய்த்தோ ளவட்கு’ (குறள் 1113) என்புழி ‘வேய்த்தோளவட்கு முறிபோலும் மெனி, முத்தம் போலும் முறுவல், தெய்வமணம் போலும் இயற்கை நாற்றம், வேல் போலும் கண் என விரித்தால் உணராதானை, இதன் பொருள், “வேய்த்தோளாட்குத் தளிரினது நிறத்தை ஒக்கும் நிறம்; முத்தினது நிறத்தை ஒக்கும் பல்லு; தெய்வமணத்தை ஒக்கும் இயல்பான நாற்றம்; வேலினது கொலைத் தொழிலை ஒக்கும் கண் என்றவாறு காண்” என ஒப்பு என்னும் வழக்கு |