பக்கம் எண் :

124தொல்காப்பியம்-உரைவளம்

வாசகத்தால் 1‘செய்யும்’ என்னும் குறிப்பு முற்று வாசகம் தோன்ற உணர்த்துக.

‘கண் மலர்ந்த காவி’ என்புழிக் ‘கண்போல மலர்ந்த காவி’ என்றால் உணராதானை, இதன் பொருள் ‘கண்ணை ஒக்க மலர்ந்த காவி’ என்றவாறு காண் என ஒப்பு என்னும் வழக்கு வாசகத்தால் 2செயவென் எச்ச வாசகம் தோன்ற உணர்த்துக.

இங்ஙனம் கூறிய இருவகை யெச்சத்தையும் முற்றையும் இவ்வுவம வுருபுகள் தருமாறு காண்க.

இனி, முறிமேனி முதலியன உருவகமாம் எனின், ஆசிரியர்க்கு உருவகமும் உவமையாமாறு 3ஆண்டு உணர்க.

இங்ஙனம் வேற்றமையுருபும் உவமஉருபும் விரித்துழி, வேற்றுமைத் தொகையென்று கோடுமோ உவமத் தொகையென்று கோடுமோ எனின், ஆசிரியர்தாம் மேற்கூறும் உவமவுருபுகளில் சில இரண்டாவதற்கு முடிபாம் என்பது உணர்த்துதற்கு உவம வுருபிற் கெல்லாம் பொதுவாய் வழக்கு வாசகமாய் நிற்கும் ‘ஒப்பு’ என்னும் உருபினைக் ‘காப்பின் ஒப்பின்’ (வெற். 11) என எடுத்து ஓதினாராகலின், அவ்விரண்டாவது அவ்வுவம வுருபுகளான் முடிந்து நின்றுழி உவமத் தொடர் மொழி ஒப்புமைப் பொருளே தந்து நிற்றலின் உவமத்தொகை யென்று கோடும்.

ஆயின் எடுத்து ஓதிய ‘ஒப்பு’ என்பதனோடு அன்றி ஏனை உருபுகளோடும் இரண்டாவது முடியுமோ எனின், முடியும்.


1. ‘முறி போலும் மேனி’ என்பதை ‘மேனி முறி போலும்’ என மாற்றின் போலும் என்பது செய்யும் என்னும் முற்று வாசகமாம்.

2. ‘ஒக்க’ என்பது செயவென் எச்ச வாசகம்.

3. ஆண்டு - உவம வியல். 9-ம் சூத்திரம்

பொருளே உவமம் செய்தனர் மொழியினும்
மருளறு சிறப்பின் அஃது உவம மாகும்.