பக்கம் எண் :

உவமத் தொகை சூ. 18127

கணேசய்யர் (சேனாவரைய உரைக்குறிப்பு)

‘குறிப்பு வினையெச்ச மாகலானும்’ என்பதனுள் ‘குறிப்பு’ என்பது நீக்கப்படல் வேண்டும். குறிப்பு என்பது நச்சினார்க்கினியர் உரையைப் படித்தோராற் சேர்க்கப்பட்டது. சேனாவரையர்க்குப் ‘போல’ முதலிய வினையெச்சங்கள் தெரிநிலைவினை என்பதே கருத்தாதல், வினையியல் 27 ஆம் சூத்திரவுரையுள், ‘போறி’ என இகர விற்று வினைக் குறிப்பும் உண்டால் எனின், போன்றனன் போன்றான் என்பனபோல வந்து தெரிநிலை வினையாய் நின்றது என மறுக்க எனக் கூறுமாற்றான் அறியப்படும். அங்ஙனேல், வினையியல் 16 ஆம் சூத்திரவுரையுள், ஒப்பினானும் என்பதற்குப் பொன்னன்னான், புலிபோல்வான் எனக்காட்டினாரால் எனின், புலிய னையான் என்று அவர் காட்டிய உதாரணத்தை நச்சினார்க்கினியர் உரைபடித்தார் பிற்காலத்தே திருத்தினாராவர். இளம்பூரணரும் பொன்னன்னான் என ஒன்றே காட்டினர். ஒப்பினானும் என்றதனால் உவமவுருபெல்லாம் குறிப்பு வினையாயே வரும் என்பது கருத்தன்று. ஏற்றனவே வரும் என்பது கருத்து. பொருளதிகாரத்து உவமவியலில் இளம்பூரணர், அன்ன இன்ன என்பனவே இடைச் சொல் என்றும், ஏனையுருபுகள் வினையெச்ச நீர்மைய என்றும், இவ்வடிகளால் முற்றும் பெயரெச்ச வினையெச்சங்களும் பிறக்கும் என்றும் கூறுதலானும் உவமவுருபுகள் எல்லாம் குறிப்பு வினைக்கு அடி அன்றென்பது உணர்ந்து கொள்க, இச்சூத்திரத்தும் ‘பொன்னன்னமேனி’ என்பது ‘பொன்மானுமேனி எனத் திருத்தப்பட்டது. அன்னதாதல் முன்காட்டிய தொகையை விரிப்புழிப் ‘பொன்னன்னமேனி’ என்று விரித்திருத்தல் காண்க.

வினைத் தொகை

409. வினையின் றொகுதி காலத் தியலும்.      (19)
  
 (வினையின் தொகுதி காலத்து இயலும்)

ஆ. மொ. இல.

Verbal-compound is in the nature of
denoting tenses when expanded